பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்ணா! பேயா !! தெய்வ மகளா ! ! !

3

மிகவும் சிறந்தது!-ஆ! நான் இதுவரை கட்டிய மனக்கோட்டை யென்ன! இப்போது யான் அடைந்த கேவல நிலையென்ன....அந்தோ! என் கைகால்களெல்லாம் சோர்வுற்றுக் துவண்டு தள்ளாடுகின்றனவே! கண் பஞ்சடைகின்றதே! என் செய்வேன் ஈசா........” என்று வாயில் வந்தவாறு பிதற்றிய வண்ணஞ் சென்று கொண்டிருந்த யான், திடீரென்று ஏற்பட்ட ஒருவித ஒசையைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்று விட்டேன்.

“பொய்திகழும் உலகநடை என்சொல்கேன்? என்சொல்கேன்?
பொழுதுபோக்கு ஏதுஎன்னிலோ பொய்யுடல் நிமித்தம்...”

என்னும் அருமைப்பாடல் இன்னிசையோடு கலந்து அமுததாரை பொழிவதுபோல் என் காதில் விழுந்தது. அதில் உள்ள வெறும் இசை மட்டும் என் கவனத்தைக் கவரவில்லை; அதனோடு கனிந்த உருக்கமுங் கலந்திருந்ததால் என் மனம் பாகாய் உருகிவிட்டது. மேலும், அப்போதைய எனது மன நிலைக்கு அப்பாடல் மிகவும் பொருத்தமாயிருந்ததால், நான் அதில் பெரிதும் ஈடுபாடுடையவனானேன். அப்பாட்டில் என் மனம் கவர்ச்சியுற்றதும், எனது பெருந்துயரமெல்லாம் மறைந்து போயிற்று. இவ்வளவுதூரம் என் மனத்துக்குப் பெரும் ஆறுதலை யுண்டாக்கிய அப்பாடலைப் பாடியவர் யார்? என்று அறிய என் மனம் பெரிதும் விரும்பியது. எனவே, அவ்வினிய ஒசை வருந் திசையை நோக்கி நான் நடக்கையில், திடீரென்று அப்பாட்டு நின்று விட்டதால், நான் திகைக்கலானேன். இதுவரை பாடப்பட்ட பாட்டு ஆகாயத்திலிருந்து பாடியதுபோலிருந்ததால், எனக்கு நேரே மேலே நோக்கினேன். என் முன்னர் ஒரு பெரிய மலை நிற்பதை யறிந்து பேராச்சரிய முற்றேன். அதன்மீது செடி கொடி மரங்கள் படர்ந்து அடர்ந்து வளர்ந்திருந்ததால், அது கண்களுக்குக் குளிர்ச்சியையும்