பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவர் சிகேகமும் ஆபத்தும் 95

அறிந்தேன். உங்கள் விருப்பப்படி இனி சான் நடக்கச் சிக்கமாயிருக்கிறேன். என்ன விடுங்கள்” என்று சாகள

மாகப் பேசினேன்.

அம் முட்டாள் நான் கூறியதை உண்மையென்றே எண்ணிவிட்டான். நான் மனம் மாறி அவன் கருத்துக் கிசைந்து விட்டதாகக்களித்து, ஆ! இப்போதுதான் நீ என் ராஜாத்தி என்ன இருந்தாலும் நீ புத்திசாலியல்லவா!-வா! சற்று நேரம் இங்கு உல்லாசமாகக் காலங் கழித்துவிட்டுச் செல்ல்லாம்” என்று கூறிக்கொண்டே என் கைகளைப் பிடித்த பிடியைத் தளர்த்தினன்.

சமயம் பார்த்துக்கொண்டிருந்த நான் உடனே என் கரங்களை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு சிறிது நகர்ந்து கின்று என் பலத்தை யெல்லாம் உபயோகித்து அம்மனிதன் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வேகமாகக் கீழே தள்ளி னேன். இதைச் சிறிதும் எதிர்பாராத அத்துரோகி பத்தடி துரத்துக்கப்பால் போய் கைகால்களை யெல்லாம் பரப்பிக் கொண்டு மல்லாந்த வண்ணம் விழுந்தான். விழுந்த வேகத் தில் கைகால்களெல்லாம் தேய்ந்து காயம் கூ ட ஏற்பட் டிருக்கலாம். அதற்கப்புறம் நான் சிறிதும் தாமதியாது, மீண்டும் கலைதெறிக்க வெகு வேகமாக ஒடினேன். ஏனென் முல் அவன் முன்போல் எங்கு மறுபடியும் என்னேத் துரத்திக் கொண்டு ஓடிவருவானே என்ற பயமேயாகும். அவன் தன்னைச் சமாளித்துக்கொண்டு எழுந்திருப்பதற்குச் சிறிது நேரம் பிடிக்கும் என்ற துணிவும் ஒரு பக்கம் இருந்தது. ஆயினும், ஒட்டத்தைத் தளர்த்தவில்லை. எப்பக்கம் போகிறே னென்பது எனக்கே தெரியவில்லை. மூளை குழம்பியுள்ள அந்நிலையில் எனக்குத் திக்குத்திசை தோன்றவில்லை. மேலும் அப்பக்கமாக நான் எப்போதும் வந்ததில்லை. எங்கு போன