பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டின் ஏமாற்றம் 103

ஜோஸியர் ஒருவர் வந்தார். அவர் உன் தந்தை ஜாதகம், உன் ஜாதகம் எல்லாவற்றையும் பார்த்து ஏதேதோ சொன் னர். நமது மோட்டார் கம்பெனி கூடிய சீக்கிரம் தீ விபத் துக் காளாகுமென்றும், நாலைந்து வருடத்தில் உன் தங்தை மரணப் படுக்கையில் விழுவா ரென்றும், உனக்கு இப் போது கேது தசை நடப்பதால், உயிருக்குத் தீங்கை விளை விக்கக்கூடிய பல இடையூறுகள் அடுத்தடுத்து ஏற்படுமென் ஆறும், ஆதலால் வெகு ஜாக்கிரதையாக உன்னைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கூறினர். இது எனக்கு மேலும் பயத்தை உண்டுபண்ணி விட்டதம்மாl-ஆமாம். நீ இனிமேல் காலேஜை விட்டதும் நேரே பங்களாவுக்குப் பொழுதோடு வந்துவிடு; சுந்தரி!” என்று சொன்னுள். நான் இவற்றைக் கேட்டு என் தாய் முகத்தை நோக்கினேன். அவள் கண் களில் நீர் ததும்பிக்கொண்டிருந்தது.

ஏழாவது அதிகாரம்

இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம்

மறுநாள் காலை எழு மணி யிருக்கும். நான் காகக் கடன்களை முடித்துக்கொண்டு சிற்றுண்டி யருந்திவிட்டு, என் தந்தையின் அறைக்குச் சென்றேன். அங்கு ஒரு சோபாவில் சாய்ந்தவண்ணம் மணிலாசுருட்டை வாயில் வைத்துப் புகைத்துக்கொண்டிருந்தார். அவரது முகம் ஆழ்ந்த, சிந்தனையில் மூழ்கியிருப்பதை வெளிப்படுத்திக் காட்டியது. நான் சென்று சில விநாடிகள் கழிந்த பிறகே அவர் எதிரில் நான் நிற்பதை யறிந்தார். உடனே அவர் வாஞ்சையோடு, 'அம்மா இப்படி உட்கார். உன்னைப் புற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். யுேம் வந்து,