பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

யக் கனத்துக்கு நான் காரணமாம். அவனது அசட்டு வாதத்தைப் படித்தால் எனக்குச் சிரிப்பு வருமா, வராதா? பொதுவாக, சம்பத்தினுடைய கடிதத்தைப் படித்ததில் எனக்கு அவன் மீது இரக்கமே யுண்டாயிற்று. எனவே, நான் அக்கடிதத்தைத் துண்டு துண்டாகக் கிழித்தெறிக் தேன். ஜான் கில்பர்ட்டிடம் சொல்லி இதைப் பிரமாதமாக் காது விட்டுவிடவேண்டுமென்று தெரிவிப்பது அவசியம் எனவும் தீர்மானித்தேன். ஆகவே, அவ்வளவோடு அவ் விஷயத்தை மறந்து, என் தந்தையைப் பார்க்க வந்திருப்ப வர் யாரெனக் கவனிக்கச் சென்றேன். நானிருந்த அறைக் கும், என் தந்தையி னறைக்கும் ஒரு கதவு மட்டும் தான் இடைமறித்திருந்தது. ஆகவே, நான் அக்கதவருகிருந்தே எதிர் அறையில் இருப்பவர்களையும் அவர்கள் பேசுவதையும் அறியலாம். எனவே, நான் அக்கதவில் இடுக்கு வழியாக

என் தந்தையோடு பேசுபவர் யாரெனப் பார்த்தேன். வந்த

வருக்குச் சுமார் 35 வயதிருக்கும். ஆள் ஆறடிக்கு மேற் பட்ட உயரமும் நல்ல பருமனும் உடையவரா யிருந்தார். அதோடு அவர் அணிந்திருந்த ஹாட்டும் பூட்டும் கம்பீரத் தேர்ற்றத்தை யுண்டு பண்ணியது. அச்சமயம் அவர் என் தந்தையோடு பேசிய தோரணை விநோதமாயிருந்தது. அச் சம்பாஷணை தனிப்பட்ட இரகசிய விஷயமாய் இல்லாதிருக் தமையால், நான் கதவின் மறைவிலிருந்தே கின்று கேட்க லானேன். - o

'என்னேத் தாங்கள் இதற்குமுன் பார்த்ததாக ஞாப கக்கூட இல்லே பீென்ரு கூறுகிறீர்கள்!-உம், என்ன இருந்தாலும் மனிதர்களுக்கு இவ்வளவு மறதி கூடாது; சார்” என்று தடுமாற்றத்தோடு கூறினர் வந்தவர். அவர் முகம் எழிாற்றத்தைக் காட்டியது. - -