பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஹிளாதேவி கலாசாலை மர்மம் 127

இன்ஸ்பெக்டர் அவ்விருவரையும் ஏறி யமரும்படிச் செய்து தாமும் முன் பக்கத்தில் உட்கார்ந்தார். - போலீஸார் வந்தவுடனேயே பயந்துபோன நாங்கள், எங்கள் பிரின்ஸிபால் மோசடிக் குற்றத்திற்காக வாரண்டு பிறப்பிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார் என்று அறிந்த தும் ஒன்றுங் தோன்ருது திகைத்துப் போனுேம். எங்களுக் குக் கைகால்கூட ஒடவில்லை. மஹிளா தேவியைப் பொலி ஸார் கைது செய்ய வந்திருக்கும் விஷயம் மற்ற வகுப்புக ளில் உள்ளவர்களுக்கும் தெரிந்துவிடவே, ஆசிரியைகளும், மாணவிகளுமாக அனைவரும் எங்கள் வகுப்பு அறையில் வந்து கூடிவிட்டார்கள். மஹிளாதேவி போலிஸாரோடு போகையில் யாரிடமும் ஒரு வார்த்தைகூடக் கூருது சென் றது அவர்களுக்குக்கூட ஆச்சரியமாய் இருந்தது. மோட் டார் புறப்படும் சமயத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோட்டார் பக்கத்தில் கின்றிருந்த ஹெட் கான்ஸ்டேபிளைக் கூப்பிட்டு இரகசியமாக எதோ சொல்லவே, அவர் மற் ருெரு கான்ஸ்டேபிளோடு வெளி வாயிலில் நாங்கள் கும்ப, லாக நின்றிருந்த இடத்துக்கு வந்து, 'அம்மா! நீங்களெல் லாம் அவரவர் இருப்பிடத்துக்குப் போகலாம். வழக்கு விசாரணைக்கு வரும்போது, உங்களில் குறிப்பிட்ட சிலருக் குச் சம்மன் வரும். அச்சமயம், நீங்கள் வந்து உங்களுக் குத் தெரிந்தவைகளைச் சாட்சி சொல்லவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஐயா உங்களுக்குத் தெரிவிக்கச்சொன்னர். இக் கட்டிடம் சீலி டப்பட்டு எங்கள் கண்காணிப்பில் இருக்கப் போகிற தாகையால் நீங்கள் போய்வாருங்கள்” என்று பணிவாகக் கூறினன். எனவே நாங்கள் இச்சம்ப வத்தைப் பற்றிப் பலவிதமாக ஒருவருக்கொருவர். பேசிக் கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தோம். ... ."