பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இவ்வழக்கில் வெளியான விமலேந்த போஸ், மஹிள தேவி ஆகியவர்களின் திருவிளையாடல்களை என்னென்பது: இப்போது கினைத்தாலும் ஆச்சரியமாகவும், அற்புத மாக வுமே இருக்கிறது. அவர்கள் வரலாற்றை ஒரு பெரிய கதை, யாகக்கூட எழுதலாம். இருந்தாலும் உமக்குச் சுருக்கிக் கூறுகிறேன். மஹிளாதேவி பர்மாவில் வியாபார நிமித்த மாகக் குடியேறிய வங்காளிக்கும், பர்மியப் பெண்ணுக்கும் பிறந்தவள். ஆகவே அவள் பேரழகியா யிருப்பதில் வியப் பொன்று மில்லை. அவள் நன்கு வளர்ந்து படித்து வருகை. யில், வங்காளவாசியான விமலேந்த போஸ் பர்மா போய்ச் சேர்ந்தான். இவர்களிருவரும் எப்படியோ சந்தித்து ஒரு வரை யொருவர் காதலித்தனர். இதற்கு முன் மஹிளா தேவியோடு பழகிக் காதலித்திருந்த சில பர்மிய வாலிபர் களும் மற்றுஞ் சில வாலிபர்களும் விமலேந்த பேர்ஸுடன் சண்டைக்கு வந்து அவன் உயிருக்கு உலே வைக்க முயன்ற னர். எனவே, இவ்விருவரும் ஒருவருக்குக் தெரியாமல் பர் மாவை விட்டு இந்தியாவுக்கு ஓடி வந்துவிட்டனர். விம லேந்த போஸ். பி. ஏ. பால் செய்திருந்தான். அத்துடன் உலகப் போக்கை நன்கு உணர்ந்தவன். இவளும் கன்ருக வாசித்திருந்ததோடு பல தேச மக்களுடன் பழகி நன்கு பேசக் கற்றுக்கொண்டிருந்தாள். இருவரும் இந்தியாவில் பல இடங்களிலும் சுற்றியலைந்தனர். விமலேந்த போஸுக்கு. எங்கும் வேலை கிடைக்க வில்லை. கையில் கொஞ்ச கஞ்சமிருந்த பணமுஞ் செலவாகிவிட்டது. ப்ல நாள் பட் டினி கிடந்து வருந்தினர். பிழைக்க வழி யென்னவென்று. இருவரும் பலநாள் யோசித்தனர். சென்னையை யடைந்த னர். அந்நகரின் நிலைமையையும், மக்கள் மனப் போக்கை யும் நன்கு உணர்ந்தனர். அங்கு அவர்களுக்கு ஒரு. யோசனை தோன்றியது. கலாசாலைகளில் சேர்ந்து ப்டிக்கா