பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

மிகவுங் குதூகலமாயிருந்தேன். இவ்விதமிருக்க, ஒரு நாள் பிற்பகல் என் பெற்ருேர் யாரோ உறவினரைப் பர்ர்க்க. வேண்டுமென்று சொல்லிவிட்டுப் போனர்கள். அதற்கு முன் நாளே என் சிற்றப்பாவும், சிற்றன்னே முதலியோரும் பெரம்பூருக்குச் சென்றுவிட்டார்கள். சிதம்பரநாதன் காலேயிலேயே எங்கேயோ போயிருந்தான். மாளிகையில் வேலைக்காரர்களே இருந்தமையால், என் தாய் என்க்குக் துணையாக, எங்கள் குடும்பத்தோழரான கிழவர் சுப்பராய முதலியாரை வரவழைத்துவிட்டுச் சென்றனர். போகையில் விளக்கு வைப்பதற்குள் வருவதாகச் சொல்லிச் சென்ற என் பெற்ருேர் இரவு மணி பத்தடித்தும் வரவில்லை. என் னமோ எதோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏதோ காரியம் இருந்தாலன்றி, இவ்வளவு நேரம் எங்கும் தாமதிக்கமாட்டார்களென்று கிழவர் சமாதானங் கூறி குர். அவர் என் கவனத்தை வேறு வழியில் திருப்ப என் னென்னமோ கதை யளந்துகொண்டிருந்தார். அவர் இங்கிதமாகவும், நயமாகவும் யாரிடமும் பேசுவா ராகை யால், நான் அவரிடம் மதிப்பும் அன்பும் வைத்திருந்தேன். நாங்கள் சாப்பிடுவதற்கு 11-மணிக்கு மேலாயிற்று. அப் புறம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கடைசி மாக, அம்மா! நேரமாய்விட்டது. நீ படுத்துறங்கு. அவர் கள் வந்துவிடுவார்கள். நான் வெளியில் படுத்துக்கொள்கி" றேன்” என்று கூறிவிட்டுக் கிழவர் சென்ருர்.

கான் கட்டிலின்மீது படுத்தேன், உறக்கமே வரவில்லை. பெற்ருேரை நினைந்து என் மனம் எண்ணுததெல்லாம் எண் ணிக் கலங்கியது. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். கண்ணே மூடிக்கொண்டே மணியடிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன், திடீரென்று அறைக் கதவு. மெல்லத்