பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரநாதனின் கலியான வெறி 139

திறக்கப்படும் ஒசை கேட்டுத் திடுக்கிட்டேன். வெளியே கிழவர் பாதுகாவலாகப் படுத்திருப்பதால் நான் கதவைத் தாளிடாது சாத்தியிருந்தேன். கதவு திறக்கப்படும் சப்தத் தைக் கேட்டதும், என் பெற்ருேர்தான் வந்து விட்டனரோ என்று நினைத்தேன். என் மனம் படபடத்தது. துடி துடிப் போடு எழுந்தேன். என் எதிரே ஏதோ ஒர் உருவம் மெல்ல வருவதுபோல் காணப்பட்டது. உற்றுப் பார்த்தேன். சிதம்பரநாதன் அசட்டு நகை நகைத்துக்கொண்டு கின்ருன், அவனைக் கண்டதும் திகைப்புற்று பின்னடைந்தேன். 'இந் நேரத்தில்-அதுவும், என் பெற்ருேர் விட்டிலில்லாத சமயத் தில் அவன் என் என் அறைக்கு வந்தான்? இரவு பதினுெரு மணிவரை காணப்படாதவன் இந்நடு நிசியில் எங்கிருந்து இங்கு வந்து முளைத்தான்? இந்நேரத்தில் அவன் என்ன நாடி வருவதற்கு என்ன அவசியம் நேர்ந்தது? அப்பேர்ப் பட்ட அவசரமான காரியம் என்ன இருக்கிறது?-ஒரு வேளை வெளியே சென்ற என் பெற்ருேருக்கு எதேனும் நேர்ந்து விட்டதோ? அந்தக் கவலைப்பற்றி என்னிடம் தெரி விக்கத்தான் இவ்வளவு துணிவாக வருகிருனே?-என்ன இருந்தாலும் ஒரு கன்னிப்பெண் தனித் து றங்கும் இடத் துக்கு வாலிபகிைய இவன் எப்படி வரலாம்? வெளியே யிருந்தே கதவைத் தட்டி என் என்ன யெழுப்பி யிருக்க லாகாது?-ஆபத்தான காலத்தில் இவ்வாறு நாகரீக முறை யில் நடந்துகொள்ளவேண்டுமென்று அவனுக்குத் தோன்றி யிராது.-நாம் என் ஒரு விஷயமும் தெரியாததற்கு முன் மனதைக் குழப்பிக் கொள்ளவேண்டும்? அவன் எதற்காக இங்கு இந்நேரத்தில் வந்தான் என்று கேட்டுத்

போம்” என்று பலவாறு எண்ணி எனக்குள்ளாகவே

தான்ஞ் செய்து கொண்டு மின்சார விளக்கைப் பொருத்தி