பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரநாதனின் கலியான வெறி 141

அதற்காக நீ யேன் இவ்வளவு துரங் கவலைப் படுகிருப்?

அவர்கள் என்ன குழந்தைகளா காணுமல் போக எல்லாம் அவர்கள் காலையில் வருவார்கள். நீ மன நிம்மதியா யிரு”

என்று கூறினன். - -

நான் ஆவலோடு எதிர் பார்த்திருக்கும் என் பெற்ருே ரைப் பற்றித் தகவல் ஒன்றுஞ் சொல்ல வாவில்லை யென்று, அவனது பதிலிலிருந்து தெரிந்ததும் நான் மிகவும் ஆத்திர மடைந்கென். அப்படியானல் நீ என் நான் தனித்திருக்கும் இடத்துக்கு இக் நேரத்தில் வந்தாய்? எதற்காக வந்தாய்' என்று உரத்த குரலில் அதிகாரத் தோரணையோடு கேட்டேன். х ...

"நீ கேட்பகைப் பார்த்தால், நான் இங்கு வந்தது தவறு என்று ஏற்படுகிறது. அப்படித் தான?”

சந்தேக மென்ன? நீ எப்படி இந்நடு இரவில் கதவைத் திறந்துகொண்டு வரலாம்? இது வாய்பு மீறிய செயலென் பதை நீ உணர வில்லையா? என்னே இந் நேரத்தில் பார்க்க வேண்டிய அவ்வளவு அவசரமென்ன? அவசியம் என்ன நேர்ந்தது?” & . . . . . . .

அவசரமும் அவசியமும் இருந்தால்தான் உன்னே. வந்து பார்க்கலாம்; இல்லாவிடில் வந்து பார்க்கக்கூடாதா?. எனக்கு அவ்வளவு உரிமைகூட இல்லையா?"

உேரிமையாவது? உருளைக் கிழங்காவது? முன் அறி. விப்பில்லாமல் திடீரென்று நான் படுத்திருக்கும் அறையைத் திறந்துகொண்டு வருவதுதான் உரிமை போலும் வீணுக வார்த்தைகளை வளர்த்துவானேன்? நீ எதற்காக என்ன நாடி வந்தர்ப் அதைச் சொல்.” --> -----