பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கம் விவாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் கடப்ப தைக் காண்பாய்.-சுந்தரிக் கண்ணே ஏதோ குமுதம் போன்ற உன் வாயால் உன்ன விவாகஞ் செய்துகொள்ள எனக்கு விருப்பந்தான் என்று கூறிவிடு. நான் உன்னே ஒன்றுங் தொந்தாவு செய்யாமல் போய்விடுகிறேன். ஏன் தயங்குகிருய்? நான் உன் அம்மான் மகன்கானே! என்னி டம் வெட்கமேன்? ஏதோ வாய்கிறந்து சொல்” என்று: மன்ருடின்ை.

அவன் சொல்லிவந்த காரணங்களேப் பார்த்தால் உண் மையாக இருக்கும்போல் எனக்குத் தோன்றியது. இவனது சதிச்செயலுக்கு என் பெற்ருேரும் உடந்தையாக இருக் கிருர்கள் என்று எண்ணியபோது என் உடல் முழுதும், பற்றி யெரிந்தது. எனக்கு இதுவரை இருந்த தைரியமெல் லாம் எங்கோ ஒடி யொளிந்தது. குபீரென்று வியர்வை அரும்பி உடம்பை கனத்தது. இந்நடு இரவில் இக்காக கன் என்ன செய்வானே? உாத்துக் கூவின.அம் உதவிக்கு வருவார் இங்கு யாருமில்லையே! எனக்குத் துணையாக இருப்பதாகப் பாசாங்கு செப்த தொண்டு கிழவலும் என்னே மோசஞ் செய்துவிட்டு எங்கோ சென்ருனே; வேலைக்காரர்களையும் வீட்டிவில்லாமல் விரட்டியடித்துவிட் டான் போலிருக்கிறதே இத்துஷ்டன்? நான் சம்மதங் கொடுக்காவிட்டால், இம்மூர்க்கன் லேகில் விட்டுச் செல்ல மாட்டான் என்று தெரிகிறது. சரிதான்’ என்று இப் போது தலையாட்டிவிட்டுத் தப்பித்துக்கொண்டு, அப் புறம் 'இஷ்டமில்லை என்று கூறிவிட்டால் என்ன முழுகிப் போய்விடும்! அயோக்கியனுக்கு அயோக்கியதனமாய்த் கடக்கவேண்டும். என் பெற்றேர் வரட்டும். அப். போது இவனுக்குச் சரியாகப் புத்தி கற்பிக்கிறேன்...........