பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

றப்பாவோடு கப்பலேச் சுற்றிப் பார்த்து வரலானேன். கப் .பலில் பல தேசத்து மக்கள். இருந்தனர். அவர்களுடைய பழக்க வழக்கங்களும் மனப் - போக்கும், நடையுடை பாவனைகளும் எனக்கு விந்ோதமாக இருந்தன. அவற்றை யெல்லாம் விவரித்து உமக்குக் கூறுவதென்ருல், பெரிய பாரதமாகிவிடும். இப்பிரயாணிகளில் ஐரோப்பா கண் .டத்தைச் சேர்ந்த மக்களே பெரும்பாலோராக - இருந்தனர். அவர்கள் ஆண்களும் பெண்களும் தங்கள் குழந்தைக ளோடு அணியணியாக இருந்து களியாட்டயர்ந்து கொண் டிருக்தனர். அவர்கள் ஊக்கமும், உற்சாகமுமாக எப் பொழுதும் இருந்து வந்தது. சுதந்தர நாட்டில் சுகமாக வாழ்பவர்கள் என்பதை வெளிப்படுத்திக் காட்டியது. இந்தியர்களில் பிரமுகர்களும், பணக்காரர்களும் பலர் அக் கப்பலில் இருந்தனர். அதுவன்றி, என் போன்று, உயர்தரக் கல்விக்காக மேடுைகளுக்குச் செல்லும் மாணவி களும் மாணவர்களும் சிலர் காணப்பட்டனர். அவர்களது போக்கும் செயலும் மிகவும் விபரீதமாய் இருந்தன. அவர்க வளிடத்தில் ஐரோப்பியர் பழக்க வழக்கங்கள் மிகுதியாகக் காணப்பட்டன. இதிலிருந்து அவர்கள் தங்களே ஐரோப்பா கண்டத்தில் நாகரிகம் பழுத்த நகரில் வாழ்பவ்ர்கள் என்று கினைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அவர்களில் சில ஆடவர்களும், பெண்களும் வரம்பு கடந்து வாயில் வந்த வாறு ஆபாசமாகப் பேசிய வண்ணம் மிருக வுணர்ச்சி மேலீட்ட்ால், தங்களைப் பிறர் என்ன கருதுவார்கள் என் புதையுஞ் சிந்தியாது, கிலே தடுமாறி இருந்தனர். இக்காட்சி என்னைத் திடுக்கிடச் செய்ததோடு, சகிக்கக் கூடாத நிலை -யையும் உண்டுபண்ணியது. இவர்களைப் போன்றே ஐரோப்பியர்களிலும் பலர் பலவிதமான கிலேயிலிருந்தன ரயிலும், அது என் மனதை இவ்விதம் சுருக்கெனச்