பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிலாந்து பிரயாணம் 165

வானத்துக்கும், கடலுக்கும் நிறத்திலோ மற்றெதிலோ வேற்றுமையே காண முடியாது. -

அதிகாலேயில் சூரியன் உதயமாவதற்கு முன் அதா வது அருளுேதய காலத்திலும் மாலே அஸ்தம்ன சமயத்தி அம் ஆகாயத்தில் உண்டாகும் அற்புதத் தோற்றங்களையும், கருங்கடலில் ஏற்படும் கண்கொள்ளாக் காட்சிகளையும் கண்டபோது, என் உள்ளம் அடைந்த பரவச நிலையை, இதற்குமுன் எப்பொழுதும்-எவ்வித மகிழ்ச்சியான கிலே யிலும் அடைந்ததில்லை. அதிலும், வளர்பிறைக் காலத்துக் காணப்படும் நீலக்கடலின் அதியற்புத தோற்றத்தை நான் எங்ங்னம்-எம்மொழிகளைக்கொண்டு-வருணித்து உரைப் பேன்? என்னுல் மட்டுமன்று, மகா கவிகளான காளிதாஸன் வான்மீகி, கம்பர் பெருமான், திருத்தக்கதேவர், இளங்கோ அடிகள், ஷேக்ஸ்பியர், டென்னிஸன், ஷெல்லி, ஒர்ட்ஸ் வொர்க் போன்றவர்களாலும் வருணித் துரைக்க முடியா தென்று துணிந்து கூறுவேன். இயற்கை யன்ன யளிக்கும் கற்பனேக் கடங்கா அற்புதமான இக்காட்சியைக் கண்ட பின்னர், செயற்கைக் காட்சிகளைக் காணக் கண்கள் கூசும் என்பது திண்ணம். எனக்கிருந்த ஆர்வத்தில் வல்லமை யிருந்தால் கடல் நடுவில் ஒரு மாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன். என் செய்வது எல்லாம் நாம் கினைத்தபடியே முடிகிறதா? கடலில் கப்பல் பிரயா ணம் செய்து ஒரு சில நாட்களாயினும், இயற்கை யன்ன யோடு நெருங்கி உறவாடும் வாய்ப்புக் கிடைத்ததே பெரும் பேறு என்று கருதினேன். நம் நாட்டில் எத்துணைபேர் பெருஞ் செல்வமிருந்தும், தகுந்த வசதிகள் கிடைத்தும், கண்களிருந்தும், இவ்வித இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க விரும்பாதிருக்கிருர்கள். அவ்ர்களே நினைக்கும்போது இரக்கமே உண்டாகிறது. . . . . . ,