பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிலாந்து பிரயாணம் 171

அவள் கைகளால் நீரை யலேத்தமையால், அந்த லேப். பெல்ட்' அவளை நெருங்காமல் துணர மிதந்து போப்க்கொண் டிருந்ததோடு, அவளும் பின்னுக்குச் சென்ற வண்ணமிருந் தாள். இதனிடையே இரண்டொரு முழுக்கும் முழுகிவிட் டாள். இதற்குள் கயிற்றேணி வழியாக இறங்கியமாலுமி கடலில் அவள் விழுந்து தத்தளிக்கும் இடத்தை நோக்கிக் குதித்தான். அதன் பின், அவன் சிறிது தாரத்தில் மிதந்து கொண்டிருந்த லேப்-பெல்டை இடது கையால் பற்றிக் கொண்டே சீமாட்டியை நோக்கி விரைந்து சீக்திச் சென் முன். இடையிடையே, காப்டனும், மற்றவர்களும், அம் மாலுமிக்கு ஊக்கம் உண்டாகுமாறு கைகளே யாட்டி ஆர வாரம் செய்துகொண்டிருந்தனர். இவ்வேளையில் அம்மாது கை கால்களை அப்படியப்படியே போட்டுவிட்டுச் செய லற்று நீரில் கட்டையைப்போல் மிதந்துகொண்டிருக்கு மிடத்தைச் சமீபித்துவிட்டான். இன்னும் ஒரு வினாடியில் அவளைப் பற்றிவிட்டிருப்பான். இதற்குள் மூன்ருவது தடவையாக, அவள் நீரில் முழுகினள். எனவே, அவள் முழுகிய இடத்தை ஆராய்ந்துகொண்டு வெகு வேகமாக நீர் திச் சென்ற மாலுமி, திடீரென்று எதையோ கண்டு வெருண்டவன்போல், கால்களைப் பின்னுக்கு உதைத்தவண் ணம் ஒரு பலத்த கூச்சல் போட்டான். அதே சமயத்தில் மற்ருெரு கூச்சலும் நீரைக் கிழித்துக்கொண்டு வெளி வந் தது. அடுத்த கணம், அச்சீமாட்டியின் தலைமட்டும் வெளிக் கிளிம்பியது. இதுவரை கடலில் விழுந்தபோதோ நீரில் மூழ்கி யெழுந்து தத்தளித்த சமயத்திலோ கூச்சலிடுவதோ, திணறுவதோ செய்யாத அம்மாது, இச்சமயம் மிகப் பரி தாபமாகக் கதறியழுதாள். மாலுமியோ எதிர்பாராதவாறு ஏற்பட்ட எதோ ஒரு சம்பவத்தால் கிலே தடுமாறியவன் போல் ஈடுகடுங்கி லேப்பெல்டை"யும் கழுவவிட்டு நீரில்