பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

மூழ்கி மூழ்கி யெழுந்தான். மாலுமியின் கூக்குரலும், அச் சீமாட்டியின் கதறலும் கப்பலில் இருந்தவர்கள் ஒவ்வொரு வர் உள்ளத்தையுந் திடுக்கிட்டுக் கலங்க வைத்தனவென்றே சொல்லவேண்டும். இவர்களது கூக்குரலுக்குக் காரண மென்னவென்று நாங்கள் கூர்ந்து கவனித்தோம். ஆ அக் கோரக் காட்சியை என்னென்பேன்! இப்போது நினைத்தா லும் என் உள்ளம் கடுங்குகிறது. அச்சீமாட்டியை ஒரு பெரிய சுரு மீன் அப்படியே பற்றி விழுங்குவதைக் கண்டு நாங்கள் உடல் பதறினுேம். எங்களில் சிலர் அக்கோரக் காட்சியைக் காணச் சகியாது ஆ” வெனக் கூவிக் கண் களைப் பொத்திக்கொண்டனர். இரவா யிருப்பினும் வளர் பிறைக் காலமாதலால், பகல்போல் நிலவு காய்ந்தது. அவ் வெளிச்சத்தில், நீரினுள் சுருமீன் வந்து அம்மாதை விழுங் கிச் செல்வது எங்களுக்கு நன்ருகத் தெரிந்தது அவ்வாறு சுரு:மீன் வாயில்பற்றி இழுத்துச் செல்லும்போது அச் மோட்டி அழுத அழுகையை அங்கோ நான் எவ்வாறு வரு ணிப்பேன்! எப்பேர்ப்பட்ட கன்னெஞ்சராயினும் அதைச் செவியுற்ருல், அகங் கரைந்துருகிக் கண்ணிர் விடுவர் என் பது திண்ணம். அப்பரிதாப அழுகை யொலி இச்சம்பவம் நடந்து பல வருடங்களாயினும் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கண் மூடிக் கண் திறப்பதற் குள், சுருமீன் அச் சீமாட்டியை இழுத்தக்கொண்டே வெகு தாரம்போய் நீரினுள் மறைந்துவிட்டது. இதுவரை என் மனதைத் திடப்படுத்திக்கொண்டிருந்த நான், இதைப் டிார்த்ததற்கப்புறம், பொறி கலங்கி கிலேமயங்கிச் சோர்ந்து விழுந்தேன். அப்புறம் என்ன கடந்தது என்பதொன்றும் எனக்குத் தெரியவே தெரியாது.

  1. 来源 来 # 来