பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்ணா ! பேயா!! தெய்வ மகளா!!!

11

கண்டதும் அவளது அமைதியான வடிவிலும், அழகிலும் என் மனம் பெரிதுங் கவர்ச்சியுற்றது. இதனால் அவள் பால் காதல் குறிப்புக் கொண்டேன் என்று வாசகர்கள் யாரும் தவறாக நினைத்துவிடக்கூடாது. அவ்விதக் காதல் நாடகம் எங்களுக்குள் ஏற்படவில்லை. அறிவும் அமைதியும் ஒருங்கே வாய்ந்த பெண்மையின் முன், வீரமும் ஆற்றலுங் கொண்ட ஆண்மை செயலற்றுப் போவது உண்மையென்பதை ஒப்புக்கொள்வோர், அம் மங்கையினெதிரே நான் கோழைபோல் வாய் திறவாது நின்றதை யறிந்து ஏளனஞ் செய்யமாட்டார்கள்.

பின்னர் யான் மனத்திடங்கொண்டு அம்மங்கையை அணுகி, “அ-ம்-மா-!............” என்று. சிறிது இழுத்தேன். அவ்வோசையைக்கேட்டு அவள் பின்வாங்கி ஒதுங்கி நின்றாள். மீண்டும் நான் “அம்மா! நீங்கள் என்னைக் கண்டு பயப்படவேண்டாம்..............” என்று மெதுவாகக் கூறினேன். அவள் முகத்தை என் பக்கம் திருப்பி என்னைக் கடைக்கண்ணால் நோக்கினாள்;

“சிறிது நேரத்திற்கு முன்..............................”

“....................”

“மிகவும் இனிமையும் உருக்கமுமான பாட்டோசை”

“........................”

“என் காதில் விழுந்து என்னை மகிழச்செய்து இங்கே இழுத்து வந்தது. அதைப் பாடியது நீங்கள்தானா?”

“.....................”

எனது கேள்விகளுக்கு அவள் ஒன்றும் பதிலளிக்காது போகவே, நான் பலபல எண்ணலாயினன். ஒரு வேளை அவள் ஊமையா யிருக்கலாமோ அல்லது ஆடவர்களிடம் பேசுவதில்லையென்ற விரதம் பூண்டிருக்கிறாளோ என்றெல்