பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிலாந்து பிரயாணம் 175

இவர்கள் களியாட்டத்தைக் கவனிப்பதும், பெருமூச்சு விடு. வதும், ஆத்திரப்படுவதுமாக இருந்தார். இக்காட்சியை கான்-நீங்கள் கவனித்தீர்களோ என்னவோ-தற்செய லாகக் காண நேர்ந்தது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வர்கள் அவர்களாகத்தான் இருக்குமோ என்று சந்தேகப் படுகிறேன். இருட்டில் கடலில் விழுந்த மாதை இன்னர் என அடையாளங் கண்டுகொள்ள என்னுல் முடியவில்லை. ஒரு வேளை இம்மாதின் கணவனைக் கண்டால் அடையாளங் கண்டு பிடிக்கக்கூடும்” என்று கூறினேன். .

உடனே என் சிற்றப்பா தலையை யசைத்து, ஆமாம் ஊகித்தது சரியே? நானும் நீ கண்ட காட்சியைப் பார்த் தேன். அக்கனவானே கடலில் விழுந்த சீமாட்டிக்குக் கணவர். ஒளிந்திருந்து கவனித்த மங்கையே அச்சீமாட்டி: அக்கனவான் தமக்குள்ள செல்வச் செருக்கால், பஞ்சமா பாதகங்களையும் வெகு சாதாரணமாகச் செய்பவரென்றும், கூடாவொழுக்கங்கொண்ட அவர் தம் மனைவியை ஏறெடுத் துக்கூடப் பார்ப்பதில்லை யென்றுக் தெரிகிறது. இருந்திர லும், இவ்வம்மையார் அவரைத் தீய நெறியினின்றும் விலக் கத் தம்மால் கூடுமானவரை முயன்று வந்தாராம்............” என்ருர். . . .”

என்ன செய்தும். பாவம்! அவ்வம்மையாரால் அம் மிருகத்தைத் திருப்பவே முடியவில்லை. அதேைலயே, அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ருர். ஆனல் கோர மரணத்துக்காளானர்; சார்” என்று கப்பல் உத்தியோகஸ்தர் தொடர்ந்து கூறினர். -

தம்மனைவி கடலில் விழுந்திறந்ததைப்பற்றி அக் கன வான் என்ன கூறுகிருர்?' என்று நான் கேட்டேன். -