பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

முதலிய பலவகையான வண்டிகள் ஒழுங்காக ஒடிக் கொண்டிருந்தன.

லண்டன் நகரின் இச்சிறப்புக்களை நேரில் பார்த்த போது நான் உண்மையிலேயே ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தேன். இதற்கு முன் என் சிற்றப்பா வாயிலாகவும், லண்டன் சென்றுவந்த மற்றும் பல நண்பர் மூலமாகவும், இங்கிலாந்து தேச வரலாற்றைப் படித்ததன் பயனுகவும், நான் லண்டன்மா நகரின் அமைப்பையும், சிறப்புக்களையும், ஒருவாறு அறிந்து வைத்திருந்தேனுயினும், இவ்வளவு அலங் காரமாக இருக்கும் என்று நான் எதிர்பார்த்ததில்லை. இரண் டாயிரம் வருடங்களுக்கு முன், ஐந்தாறுமைல் பரப்பை யுடையதாயிருந்த ஒரு சிற்றார்-நாகரிக மில்லாத செம்பட வர்களே நிறைந்திருந்த ஒரு சிற்றார், இப்போது 700 மைல் பரப்பினே யுடையதாய் நாகரீகத்திலும், அறிவிலும், ஆராய்ச் சியிலும், அரசியல் தந்திரத்திலும் சிறந்த பல்லாயிரம் மக் களைக் கொண்டதாய், பலவகைச் சிறப்புக்களையும் வாய்ந்த தாய் இருக்கின்றதென்ருல் அது பேராச்சரியமுறத் தக்க தன்ருே இப்போதுகூட உலகப் படத்தில் பிரிட்டிஷ் தீவுகள் எங்கே இருக்கின்றனவென்று விளக்கைக் கொண்டு தேடிப் பிடிக்கக்கூடிய நிலையிலன்ருே - இருக்கின் 1றன எனினும், இங்கிலாந்து தேசத்தின் தலைநகரான லண் .டன்மா நகரம் உலகத்திலுள்ள பெரிய நகரங்களுள் தலை சிறந்து விளங்குகிறது என்று கூறுவது மிகையல்ல. மனி தராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் லண்டன்மா நகரைப்

பார்த்தே தீரவேண்டும்.

இவ்வாறு நான் லண்டன்மா நகரச் சிறப்பைப் பாராட்டிக்கொண்டே சிற்றப்பாவோடு டாக்ளி கே பில் சென்று கொண்டிருந்தேன். இதனிடையே, ஜான் கில்