பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மா நகரின் சிறப்பு 181

விளங்கும். எங்கு பார்த்தாலும், பலவித கிறம் வாய்ந்த மின்சார விளக்குகள் பிரகாசிப்பது இதென்ன பூலோக சுவர்க்கமோ என்று கருதும்படியாக இருக்கும். அன்று ஜான் கில்பர்ட் என்னே ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்ருன். அங்கு ஏராளமாகக் கூட்டம் இருந்தது. இருப்பினும், மக்கள் அமைதியாக இருந்து ஒவ்வொருவ ராக டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றனர். நாங்களும் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போய் உட்கார்ந்தோம். ஆங்கில நாடக ஆசிரிய ரான ஷேக்ஸ்பியர் எழுதிய மாக்பெத்" (Macbeth) என்னும் நாடகம் நடித்துக் காட்டப்பட்டது.

ஜான் கில்பர்ட் மற்ற நாட்களைக் காட்டிலும் மிகுந்த குதுகலமா யிருந்தான். நாடகம் ஆரம்பமானதும் அவன் அதில் நடிக்கும் நடிகர்களுடைய திறமையைப் பற்றிச் சொல்லத் தொடங்கியவன் இடையிடையே சம்பந்தமில் லாத வார்த்தைகளைக் கொட்டி யளக்கலானன். அத்துடன் அவன் கைகளே இப்படியும் அப்படியுமாக ஆட்டி, என்ன இடித்து இடித்துப் பேசினன். நான் அவனது செயல்களை அவ்வளவாகப் பாராட்டவில்லை. கடைசியாக, அவன் காதல் சம்பவங்களை வருணிப்பதில் ஷேக்ஸ்பியரின் நிபுணத் வத்தைப் பலபடக் கூறி வந்தவன் உணர்ச்சி மேவீட் டாலோ என்னவோ சுற்று வட்டத்தைக்கூடக் கவனியாது உரக்கப் பேசத் தொடங்கி என் தோளின்மீது கையைப் போட்டு வீணைத் தந்தியைத் தடவுவதுபோல், என் கன் னத்தை வருடலானன். இச்செயல் எனக்கு ஒருவித திகைப் பையும், பரம சங்கடத்தையும் உண்டு பண்ணியது. இவன் என்ன மூளையை இழந்து விட்டர்ன என்றுகூட எண்ணி னேன். இச்சமயம் என் பின்னிருந்து கலுக்' என்று