பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மா நகரின் சிறப்பு 185

துக்கியெறிந்தது அவனுக்கு ஒரு வேளை கோபமுண்டாக்கி யிருக்கலாம். நான் அவனே மீண்டும் சங்கோஜத்தோடு கவனிக்கும்போது அவன் தாரதிருஷ்டிக் கண்ணுடியால் நாடகத்தை மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந் தான். சிறிது நேரத்திற்குப் பிறகே, நான் தலையைத் தூக்கி காலா பக்கத்தையுஞ் சுற்றிப் பார்க்கலானேன். எங்கு பார்த்தாலும், அணியணியாகவே இருந்த ஆண்களும் பெண் களும் ஒருவருக்கொருவர் சாகசச் செயல்களையும் சல்லாப மொழிகளையுமே பரிமாறிக் கொண்டிருந்தனர். இக்காட்சி யைக் கண்ட பின்னர், என்னிடம் குடி கொண்டிருந்த நாணம் அவ்வளவாகத் தலைகாட்டவில்லை. ஆண் பெண் பேத மின்றிச் சமத்துவம்ாகவே பழகும் நாட்டில் பிறந்த ஜான் என்னிடம் யாதொரு விகற்பமுமின்றிச் சர்வ சாதாரண மாகவே நடந்திருக்கிரு னென்றும் அவனது அக்கியோங்கிய பாவத்தை பறியாது அவனிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது அடிமை நாடாகிய இந்தியாவில்-அதிலும் மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்த தென்னிந்தியாவில் பிறந்ததன் பயனுக உண்டான சகவாச கோஷமென்றும் கருதி மனம் வருந்தினேன். ஆகவே, இதல்ை ஒருவேளை உண்மை நண்பனுகிய ஜான் கில்பர்ட்டின் மனம் புண்பட் டிருக்கலாம் என்று எண்ணிய நான் அவனைக் குதுகலப் படுத்த வேண்டி கானகவே அவன் முதுகைத் தட்டிக் கொடுத்த வண்ணம் அவனே மிக நெருங்கிக் காதருகே முகத்தை வைத்து சம்பந்த மில்லாத வார்த்தைகள் பேச லானேன். ஜான் சிறிது நேரம் எங்கோ கவன முள்ளவன் -போலிருந்து, என் பக்கங் திரும்பி ஒரு விதமாகப் புன்முறு வல் கொண்டான். அதற்குப் பதிலளிப்பவள் போல் கானும் ஜானேப் பார்த்துச்சிரித்தேன். அதென்ன அர்த்தமில்லாத

13