பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன்மா நகரின் சிறப்பு 191

அதை மெதுவாகக் கீழே இறக்கினன். தொட்டி 120 அடி களுக்குக் கீழே போய் கின்றது. நாங்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியேறிளுேம். அங்கு பல விடங் களுக்கும் வழி சென்றது. நாங்கள் கொஞ்ச தாரஞ் சென் றதும், அப்போதுதான் வந்து கின்ற மின்சார வண்டி யொன்றில் ஏறினேம். அவ் வண்டியில் கதவைத் திறந்து மூடுவதற்கு switch அமைந்திருந்தது. அதைக் கவனித்தற் கென்று அமர்த்தப்பட்டிருந்த வேலேயாளொருவன் வண்டி ஒரு இடத்தில் கின்றதும், அந்த ஸ்டேஷன் பெயரும், வண்டி புறப்பட்டவுடனே அடுத்த ஸ்டேஷன் பெயரும் உரத்துக் கூறிக்கொண்டிருந்தான். அதுவன்றி ஸ்டேஷன் பெயரும் பெரிய எழுத்தில் எழுதி யிருந்தது. பூமியின்கீழ் வண்டிகள் போவதற்கும், வருவதற்கும் வேறு வேறு வழி (Tracks) இருந்தது. வண்டிகள் போவதற்குப் பூமியைத் கொளத்து உள்ளிடத்தில் செங்கல்களால் கட்டி வழி அமைத்திருந்தது. அங்கு டிராம் வண்டிகள் கூட ஒடிக் கொண்டிருந்தன. & -

தரையின் உள் வழியாகவே லண்டன் நகரின் பல பாகங்களுக்குஞ் சென்று விட்டு, மீண்டும் நாங்கள் தரை யின் கீழாகவே யிருந்து மேலேறினுேம். இச்சமயம் (Lift)ல் ஏறுவதற்குப் பதிலாக, இப்போது அசையும் படிகள் (Moving stairs) ஒன்றில் ஏறி கின்ருேம். உடனே நாங்கள் அப்புடிமீது கின்றவாறே மேலிடத்தை படைந்தோம்.

மற்ருெரு நாள் ஜான் கில்பர்டும், நானும் லண்டன்மா நகரை யடுத்துள்ள குன்றுகளையும், வனங்களையும் சுற்றிப் பார்த்துவரச்சென்ருேம். நாங்கள் ஒரு தனி மோட்டார் காரில் ஏறிச் சென்ருே மாதலால், இயற்கைக் காட்சிகளைக் கண்ணுரக் கண்டு களித்தோம். பொழுது சாயுஞ் சமயத்