பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#96 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தென்றும், சிநேகிதர்க்ளினிடையே சகஜமாக நடைபெறக் கூடிய விளையாட்டுச் செயலென்றும் நான் கருதிப்பேசாம லிருக்கும்படி அவன் முதலிலிருந்தே மிகத் தந்திரமாகப் பழக்கி வந்திருக்கிருன். அதிலும் லண்டனுக்கு வந்ததற்கு அப்புறம் அவன் முன்னேயினும் தாராளமாகப் பேசியும் பழகியும் வந்ததோடு, என் விருப்பத்தை யறியாமலே, எந் தச் சமயத்திலும், என்னவானுலும் செய்வது என்ற கிலேக்கு வந்து விட்டான். இராத்திரி சங்கம் (Night Club), சினிமாப் u -áærlig Frå» (Picture Palace) முதலிய இடங்களுக்கு என்னை அடிக்கடி அழைத்துச் சென்று, விட புருடரோடு திரியும் விலைமகளிர் போக்கைக் காட்டி, உலகம் என்ருல் இதுதான்.மக்கள் வாழ்க்கை என்பது இதுதான்-என்று எண்ணி மனவிகாரமடையும்படிச் செய்து, அவன் கருத்தை நிறைவேற்றுவதற்கு என்னைப் பண்படுத்தி வந்தான் என்று தெரிகிறது. அதிகம் கூறுவானேன்! ஜான் கில்பர்ட், பூநீகி வாஸன் போன்றவர்கள் என்னே மயக்குவதற்குச் செய்து வந்த ஆடம்பரமான உடைகளிலும், தடபுடலான செயல் களிலும், நயவஞ்சகப் பேச்சிலும் நான் அறிவைக்கொள்ளை கொடுத்தேனே யொழிய உண்மையானவர்கள் நட்பை நான் சிறிதும் மதித்தேனில்லே.

எனது சிநேகிதர்களில் என்னே எனக்காகவே நேசித்து, - என் நன்மையையே விரும்பி வந்தவர் ஒருவர் உண்டு என் ருல் அவர் சத்தியநாதன் என்பவ ரொருவர்தான். அவரைப் போன்ற உத்தம புருஷரை என் வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. அவர் ராஜதானி கலாசாலையில் என்ளுேடு வாசித்தவர். அவரைப்பற்றி உமக்கு இதுவரை ஒன்றுமே கூறவில்லை. அவரது அமைதியான தோற்றமும், மேன்மை யான பேச்சும் போலி நவ நாகரிகச் சேற்றில் அழுந்திய