பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

திருந்தாள். போகும் வழியில், சைபைஜாருக்குச் சென்று சில துணிமணிகளை வாங்கிச் செல்லலாமென்று எங்களுக்கு யோசனை யுண்டாயிற்று. எனவே, நாங்கள் ஏறிவந்த (Governess cart) ஐ சைனுபஜார் பக்கம் ஒட்டச் செப் தோம். வண்டி பெரியமெட்டு வழியாக வந்து பீபில்ஸ் பார்க்குக்குள் நுழையும்போது, இருக்காற்போலிருந்து குதிரை இடக்குச் செய்ய ஆரம்பித்தது. வண்டி யோட் டிக்கு அது அடங்காது முன்னங்கால்களைத் தாக்கிக்குதித்து முன்னுக்கும் பின்னுக்குமாக இழுத்து எங்களே யலட்டியது. அது செய்யும் ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் வண்டியிலிருந்து துக்கி யெறியப்படுவோம் போலிருந்தது. என் சிற்றன்னே யின் குழந்தைகள் இதைக் கண்டு பயந்து அழ ஆரம்பித் தன. இங்கிலையைக் கண்டு ஜனங்கள் கூடி விட்டார்கள். ஆல்ை, எல்லாரும் குதிரையின் சண்டித்தனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களே யொழிய, வண்டியி லிருப் பவர்களுக்கு விபத்தொன்றும் நேராதவாறு காப்பாற்ற: வேண்டுமே என்ற எண்ணம் ஒருவருக்காயினும் இருந்ததா கத் தெரியவில்லை. நாங்கள் இறங்குவதற்கோ வழியில்லை; சங்கடப்பட்டுக் கொண்டிருந்தோம். இச்சமயத்தில் யாரோ ஒரு வாலிபர் கிழக்குப் பக்கமாக இருந்து ஓடிவந்து துள் ளித் துள்ளிக் குதிக்கும் குதிரையின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு, ஒரு காவுத்தாவிக் கடிவாள வாளைப் பற்றி இழுத்துப் பிடித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் குதிரை அடங்கி கின்றுவிட்டது. உடனே வண்டியோட்டி வண்டியினின்றும் கீழே குதித்து, அவ்வாலிபருக்கு நன்றி கூறிவிட்டு, குதிரையைத் தட்டிக் கொடுத்துச் சாந்தப் படுத்தினன். இவ்வளவு துணிகரமாகக் குதிரையை படக் கிய வாலிபர் யாரென்று நான் பார்த்தேன். என்ன ஆச் சரிய்ம் எனது கலாசாலைத் தோழர் சத்தியநாதனே அவ்: