பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~210 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

என்று எனக்குத் தோன்றவில்லை. எவ்வித முடிவுக்கும் வராமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன். நெருப்பின் மீது நிற்பவர்கள் எவ்விதம் இருக்கை கொள்ளாமல் தவிப்ப்ார் களோ அதுபோன்றே நானும் என் அறைக்கும் தாழ்வாரத் துக்குமாகப் பரபரப்போடு உலவிக்கொண்டிருந்தேன். தந்திச் சேவகன் பணத்தைக் கொடுக்கக் காத்துக்கொண் டிருப்பதையும் நான் நெடுநேரங் கவனிக்கவில்லை. என் பரி தாப நிலையைக் கண்டுதான் போலும், அவன் அவசரப்படுத் தாது தக்க சமயத்தை எதிர்பீாத்து நின்று கொண்டிருந் தான் என்று நினைக்கிறேன். கலாசாலை மணி :கண கண' வென்று ஒலிக்க ஆரம்பித்த பிறகே என் மனக் குழப்பத்தி னின்றும் விழிப்புற்றேன். மணி படிக்குஞ் சப்தங்கேட்ட தும், மாணவிகள் அவசரமாகப் புத்தகங்களை வாரி யெடுத் துக்கொண்டு ஓடினர். நான் இருக்கும் பக்கமாக ஓடிவந்த எலிஸா லாண்டி என்ற பெண்மணி எனக்காகத் தந்திச் சேவகன் காத்திருப்பதைக் குறிப்பிட்டுவிட்டுச் சென்ருள். அப்போதே அவன் பணங் கொடுக்கக் காத்திருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே நான் அவனிருக்கு மிடஞ் சென்று அவன் வைத்திருந்த தந்தி மணியார்டரில் கையெழுத்திட்டு 500 ரூபாயைப் பெற்றுக்கொண்டேன்.

உடம்பு அசெளக்கியமாயிருந்த இரண்டொரு மாண விகள் தவிர, மற்றவர்களெல்லாம் கலாசாலைக்குச் சென்று விட்டனர். நான் இன்னும் எவ்வித முடிவுக்கும் வராமலே அலேந்து கொண்டிருந்தேன். இச்சமயம் ஹாஸ்டலுக்கு எதிர் பக்கத்துள்ள தெரு வழியாக ஜான் கில்பர்ட் போய்க் கொண்டிருந்தது தற்செயலாக என் கண்ணில் பட்டது. ன்னே யறியாமலே ஜான்; மிஸ்டர் ஜான் என்று என் குறிப்பறிந்த ஹாஸ்டல் பியூன் ஓடிச்