பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+224 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அப்பா போய்விட்டாரம்மா! சம்மை நடுத் தெருவில் விட்டு விட்டு. இனி நாம் என்ன செய்கிறதடி. 'என்று ஒப்பாரி வைத்து அழுது அலறியவண்ணம் வாயிலும் வயிற். நிலும் அடித்துக்கொண்டாள். எனது வாழ்க்கையில் இது வரை இவ்வித துக்க சம்பவம் நிகழ்ந்ததில்லை யாகையா லும், பெண்களின் இழவு’ப் போராட்டத்தைக் கண்டதே. யில்லே யாகையாலும் எனக்கு அச்சமயம் என்ன செய்வ. தென்று தோன்றவில்லை. எனவே மனம் பதற உடல் பதற கின்ற நான் வாய் குழற, 'அம்மா!............”என்று ஆரம்பித்தவண்ணம் நெருங்கினேன். இதற்குள் என் தாய் ஆவேசங் கொண்டவள்போல் என்னைத் தாவிப் பிடித்து இழுத்து உட்கார வைத்து முகத்தோடு முகத்தைப் பொருத்தி ஒ'வெனப் பெருத்த கூச்சலிட்டுக் கதறி யழு. தாள். அடி என் செல்வமே உனக்குக் கலியாணஞ் செய்துகூடக் கண்ணுல் பார்க்க வில்லையே!............இதற். குள் இந்தக் கொள்ளே வந்து நேர்ந்து விட்டதே!............ நம் குடும்பத்துக்குத் திடீரென்று இந்த மாதிரியான கதிவரு மென்று யாருக்காகிலுந் தெரியுமா?........ பாழுந் தெய்வமே உனக்குக் கண்ணில்லையா?’ என்று என் தாய் ஏதேதோ!. கூறிப் பிரலாபித்தாள். அவளது பரிதாபகரமான அழுகை யொலி கல்லேயுங் கரைந்துருகச் செய்யுமென்ருல், எங்களைச் சேர்ந்தவர்களேயன்றி வேடிக்கை பார்க்க வந்தோரும் உடன் அழுதது ஒர் ஆச்சரியமில்லை. நான் வாய்விட்டு அலற வில்லையே யொழிய, முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு குமுறிக் குமுறி யழுதேன். வஞ்சகியான என் சிற்றன்னை அச்சமயத்திலும் கிமிஷத்துக்கொரு தடவை கண்ணைத் துடைப்பதும் மூக்கைச் சிந்துவதுமாகப் பாசாங்கு செய்தாளே யொழிய அவளது மகள் அழு மவ் வளவுகூட உண்மையாக அழவில்லை. இத்துணே நாள் இவ -