பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 225,

சது ஆதரவில் உண்டு உடுத்து இனிமையாக வாழ்ந்து வங் தோமே என்ற நன்றி யறிதல் கொஞ்சமாவது இருந்தால் தானே அவள் மனங் கனிந்து அழுவாள்! தான் எக் கேடு கெடுவதாயினும், அவள் கண் முன் நாங்கள் பல துன்பங் களுக் காளாகிப் பரம எழைகளாய் வருந்தவேண்டு மென் பதுதான் அவளது கித்திய பிரார்த்தனே ஆகையால், அவள் என் தந்தை இறந்த இச்சமயத்தில் உள்ளே மகிழ்ந்து வெளிக்கு அழுவதாகப் பாவனே செய்ததில் வியப்பொன்ற மில்லை பல்லவா!

எங்களுக்குத் திடீரென்று ஏற்பட்ட இப்பேரிடியைத் தாங்கமாட்டாது) நானும் என் தாயும் கதறிப் பதறி பழுவ தும், மாறி மாறி அடிக்கடி மூர்ச்சைப் போட்டு விழுவதும் எழுவதுமாயிருந்தோம். அக்கம்பக்கத்திலுள்ள அயலவர் களே. எங்களை மூர்ச்சை தெளிவிப்பதும் தேற்றுவதுமாப் இருந்தனர். என் தந்தை திடீரென இறந்த செய்தி காட்டுத் தீப்போல் எங்கும் பரவி விடவே, நாழிகையாக ஆக ஜனக் கூட்டம் அதிகரித்துவிட்டது. ஆனல் எங்கள் உறவினரில் ஒரு சிலர் தவிர, பெரும்பாலோர் வரவில்லை என்பதை அன் பரே! நீர் அறிதல் வேண்டும். என் சிற்றப்பா மேன் மாடிக்கு வருவதும், கீழே இறங்கிச் செல்வதுமாக கிலே கொள்ளாது கிரிந்துகொண்டிருந்தார்.

"இவருக்கு என்ன உடம்பு'

கன்ரு யிருந்த புண்ணியவானுக்கு இப்படித் திடீ ரென்று மரணஞ் சம்பவிக்குமா?”

நேற்று சாயங்காலங்கூட இவர் மேன் மாடியில் உலவிக்கொண்டிருந்ததை என் கண்ணுல் பார்த்தேனே! அப்படியிருக்க, இாத்திரிக்குள் இவர் எப்படி இறந்து போளுர்?" --