பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 229

அக்கடிதத்திலுள்ள வார்த்தைகள் சில விடங்களில் தெளிவாகத் தெரியாமலிருந்தன. எழுதப்பட்ட மை கலைக் திருப்பதே அதற்குக் காரணமெனத் தெரிந்து, பல முறை அக்கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்த நான் என் தந்தை அக்கடிதத்தை யெழுதும்போது அழுதுகொண்டே யெழுதி யிருக்கிருரென்றும், அவரது கண்ணிர்த் துளிகளே மையைக் கலைத்து வார்த்தைகளைத் தெளிவாகத் தெரிய வொட்டாது செய்திருக்கிறதென்றும் பின்னர் ஊகித்தறிந் தேன். அக் கடிதத்திலுள்ள பொருளே ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க எனக்குத் துக்க மேலிட்டது. நான் கடிதத்தைக் கண்டெடுத்துப் படிப்பதைப் பார்த்ததும் என் சிற்றப்பா என்னிடம் வந்து அதை வாங்கிப் பார்த்தார். உடனே அவர் முகம் மாறுதலடைந்தது. ஒன்றுஞ் சொல்லாமல் அதை என்னிடமே கொடுத்துவிட்டு வெளியே போய்விட் ட்ார். என் தாய் பைத்தியம் பிடித்தவள்போல் மாறிவிட்ட தால் என் செயலே அவள் கவனிக்கவேயில்லை. என் சிற் ஹன்னமட்டும் அக் கடிதத்தில் என்ன எழுதி யிருக்கிறது என்று அறியத் தடிதுடித்துக்கொண்டிருந்ததை சான் குறிப்பா லறிந்தேன். ஆனல் அவளுக்கு அது என்ன வென்று என்னைக் கேட்கத் துணிவில்லை.

கடைசியாக, எவ்வாருே அன்று மாலை நான்கு மணிக்கு என் அருமைத் தந்தை-செல்வத் தந்தை-யின் பிரேதம் சந்தடியின்றிச் சாதாரண முறையில் அநாதைப் பிணம் போல் அடக்கஞ் செய்யப்பட்டது. அதன் பின் முறையே செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளெல்லாம் ஒருவாறு செய்து முடிக்கப்பட்டன. இதற்கு முன் தேனீக்கள்போல் மொய்த்துக் கொண்டிருந்த உற்ருர் உறவின . ரெல்லாம் பிரேத அடக்கத்துக்கு மட்டுமல்ல, உத்தரகிரியைக்கும்