பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கூட வாதது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. தூர பந்துக் களாயும் நண்பர்களாயுமுள்ள ஒரு சிலரே உடனிருந்து காரியங்களை நிறைவேற்றினர். . . . . . *

உத்தரகிரியை முடிந்ததோ இல்லையோ கடன்காரர். கள், எங்கள் சொத்துக்களே எலத்தில் போட்டனர். கடன் காரர்கள் தாராள மனப்பான்மை காட்டியிருந்தால், கிரமப் படி எங்கள் சொத்துக்களே விற்றிருந்தால், அவர்களுக்கும் கடன் கொடுத்து ஏதோ எங்களுக்குங் கொஞ்சஞ். சொத்தோ பணமோ மீதமடைந்திருக்கும். அதைக் கொண்டு நாங்கள் ஒருவாறு காலத்தள்ளி யிருக்கலாம். ஆஞல், எலத்தில் விட்டதில் ஒன்றுக்குப் பாதியாகப்போப் கடன்காரர்களுக்கே சரியாகக் கடன் சேராது போய்விட் டது. ஆகவே, நாங்கள் தங்கக்கூட குடிசையில்லாமல் நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.

என் சிற்றன்னே கருமாதி முடிந்ததும் தன் மகளை Ավւனழைத்துக்கொண்டு எங்களைவிட்டு மெல்ல நீங்கி என் பாட்டி ஊராகிய மன்னர்குடிக்குப் புறப்பட்டுவிட்டாள். கடன்காரர் போட்ட பகிரங்க எலத்தில் எங்கள் சொத்து ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் போன பிறகு என்சிற்றப்பா மிகவும் கவலையோடு என் தாயிடம் வந்து, 'அண்ணி கிற் கக்கூட நிழலில்லாமல் நம் கதி வந்துவிட்டது. இங்கிலேயில் இச்சென்னே நகரில் எப்படிக் காலங் தள்ளுவதென்று தெரியவில்லை. ஆகையால், நான் ஒரு உத்தியோகத்தைத் தேடிப் பெறும்வரை நீங்களும், புவனவும், மன்னர்குடிக்கு ............"என்று கூறி வருகையில், துயரமே வடிவாய் இருந்த என் தாய் சீறி எழுந்து, கம்பி! அந்தப் பேச்சை மட்டும் எடுக்காதே! நாம் நல்ல நிலைமையில் இருந்தவரை அடிக்கடி வந்து கூடிக்குலாவி, உண்டு. உடுத்துச் சென்ற