பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நான் உடம்பு குன்றியுட்கார்ந்திருந்தேன். என் மனம் பலப்பல எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது. திடீ ரென அறைக் கதவு திறக்கப்படவே, சிந்தனை கலந்து தலை கிமிர்ந்து பார்த்தேன். என் முன்னே சிற்றன்னே மிடுக்காக இடுப்பில் கைவைத்து நின்றுகொண்டிருந்தாள். என் பாட் டியும், மற்று மிரு மகளிரும் அப்போதுதான் அறையினுள் வந்துகொண்டிருந்தனர். என்னே ஏளனப் பார்வையாகப் பார்த்துக்கொண்டிருந்த சிற்றன்னே உடனே அவர்கள் பக்கத் திரும்பி, அம்மா! பார்த்தாயா! உன் அருமைப் பேத்தி உட்கார்ந்திருக்கும் ஒய்யாரத்தை தன்னைப் பெற்ற தாய் போய்விட்டாளே என்ற கவலை கொஞ்சமாகிலும் இருந்தால் இவள் இப்படி இருப்பாளா பாவம்! சர்க்க ரைக்கட்டி அழுதழுது பாகாய் உருகிப் போகிறதென்று கண்ணிர் வடிக்கிருயே அம்மா!-இவள் பாசாங்குக்காரி யென்று முளையிலிருந்து கிளம்பிய போதே தெரியுமே!. ஊரார் மெச்சிக்கொள்ள இந்நேரங் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு கூத்தடித்தாள்'................ உம் அப்பா நாலு நாளானுைம் இவள் என்ன ஆட்டம் ஆடிகுள் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாள் இவள் வைத்ததுதான் சட்டம் எந்த விதமாய் இவள் தலை கவிழ்ந்து ஆடினுள்! அதுதான் கடவுளுக்குக்கூடப் பொறுக்கவில்லை. அந்தச் சமயத்தில் நாங்களெல்லாம் இந்தச் சிறுக்கிக்கு என்ன பயப்படுவோம் தெரியுமா அந்த மனுஷன்-அதான் இவள் அப்பன்-இவளேப் பூலோக ரம்பை யென்றும், காணக் கிடைக்காத கற்பகமென்றும் எண்ணி ஊரிலில்லாதபடி செல்லங்கொடுத்து வளர்த்து அவள் இஷ்டப்படியெல்லாம் ஆடினன். அதற்குமேல் இப்போது செத்த புண்ணியவதி இவளைத் தரையில் விட்டால் தவங்குலேந்து போகுமென்று கருதித் தலையிலே ஏந்திக் கொண்டிருந்தாள் இப்படி