பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 243.

யெல்லா மிருந்தால் பெண் அடங்காப் பிடாரியாய்ப் போவ தற்குக் கேட்கவா வேண்டும் அந்தச் செல்வமெல்லாம் இனிமேல் எங்கே?............................ ’ என்று ஆடிப்பாடிப் பேசினுள். -

இவ்வளவு துணிவாக என்னெதிரியிலேயே என்னே இடித்திடித்துப் பேசியது இதுவே முதல் தடவை யாக லால், என் சிற்றன்னே கூறிய சொற்களைக் கேட்டு நான் உடல் நடுங்கினேன். என் கண்களில் நீர் நிரம்பிப் பார் வையை மறைத்தது.

என் பாட்டி இடை மறித்து, அடி ஜகதா எண்டி. குழந்தையைக் கண்டு குலைகிருப் பாவம்! அது பொன்னே யும், பொருளையும், தகப்பனையும், கடைசியாக இப்போது பெற்ற தாயையும் பறிகொடுத்துவிட்டு எங்கித் தவிக்கிறது! அழாதே அம்மா அந்தக் கொள்ளிக்கண்ணி எதாகிலும் பிதற்றிக்கொண்டு போகிருள்! நீ கண்ணத் துடைத்துக் கொள்; அழாதே" என்று கூறியவண்ணம் தன் முந்தான் யால் என் கண்களைத் துடைத்துத் தேற்றினுள்.

இதைக்கண்ட என் சிற்றன்னே ஆத்திரமாக, குழந்தை குழந்தையைப் பார் கழுதைக்கு வயசாற்ைபோல் 22 வய தாச்சு. குதிர்போல வேறே வளர்ந்திருக்கு: குழந்தையாம். பால் குடிக்கிற குழந்தைக்கு பாவம் பாட்டி சிபார்சுக்கு. வந்து விட்டாள்! இன்னும் உங்களையெவ்லாம் இவள் மதித் தாளாகுல் நீங்கள் இவளைத் தலையில் தாக்கிக்கொண்டு ஆடு வீர்கள்!-நம் சிதம்பரநாதனே இவள் கலியானஞ் செய்து, கொள்ள மாட்டேனென்று சொல்லி அவமானப்படுத்தி: அனுப்பியதை இதற்குள் நீ மறந்துவிட்டாய்போலிருக்கு1. இவள் பண்ச் செருக்கும் படிப்புக் கர்வமுங்கொண்டு மன்மகன்போ லிருக்கும் அவனே கறிக் கள்ளினளே!