பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கீழாகச் சுற்றுவது போல்வுக் தோன்றியது. தட்டித் தடு மாறி எழுந்து உட்கார்ந்த நான் மீண்டும் ஒருவித மயக்கத் தால் கீழே சாய்ந்து விடுவதுபோன்ற பலவீன உணர்ச் சியை யடைந்தேன். >

எனவே, என் நிலையைச் சமாளித்துக்கொண்டு எழுந் திருக்கச் சிறிது நேரமாயிற்று. நான் என் சிநேகிதையின் சகோதரன், இளம் பருவ நண்பன், என் அன்புடைக் காத லன்! என் ஆருயிர் நாயகன், எனது வருங்கால வாழ்க் கைத் துணைவன் என்றெல்லாம் எவனேக் கருதியிருந்தேனே, என் உடல், பொருள் இவைகளை ஆட்படுத்தியது மட்டு மல்ல, ஆவியையும் எவனுக்குத் தத்தஞ்செய்யக் காத்திருந் தேனே, அவன்-அந்த ஜான் கில்பர்ட் பரம வஞ்சகனய்கன்னெஞ்சக் காதகய்ை-நன்றி. கொன்ற பாதகனுய்ப் போய் அவன் இதுவரை தான் நடித்துவந்த ஆஷாடபூதி வேஷத்தைக் கலைத்து உண்மைச் சொரூபத்தோடு வெளிப் பட்டுச் சிறிதுங் கண்ணுேட்டமின்றி என்னைப் புறக்கணித்த பின்னர் அங்கு ஒரு கணமும் தாமதிக்க எனக்கு விருப்ப மில்லை; ஏற்கனவே உள்ள எனது குழப்ப நிலைமையும், நஞ் சினுங் கொடிய அவனது கடுஞ்சொற்களால் அடைந்த எனது மன நிலைமையுஞ் சேர்ந்ததன் பயனப் உண்டான உடல் தடுமாற்றத்தாலேயே அச் சிறு விநாடிகளும் கெருப் பின்மீது நிற்பதுபோன்றே துடிதுடித்து மனம் புழுங்கி னேன். சீக்கிரம் அவ்விடத்தைவிட்டு வெளியேறி விட வேண்டுமென்ற ஆணர்ச்சி என் தேகத்தைச் செயற் படச் செய்தது. தன்யில் கைகளை ஊன்றியவண்ணம் மெல்ல எழுந்து நின்று தட்டுத் தடுமாறி நடந்து அவ்வறையை விட்டு வெளியேறினேன். - இவ்வளவு நேரமும் ஜான் வேறு ஆக்கக் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டே கற்கிலேபோல் கின்றிருந்தான். அறையைவிட்டு வெளியேறும்போது,