பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன சமூகத்தைவிட்டு வெளியேற்றம் 263.

வேலையை ராஜிநாமா கூடச் செய்யாமல் மறுநாளே அவ்விடத்தைவிட்டு குழந்தையுே டு தெற்கு நோக்கி கடக் தேன். கையிலோ செல்லாக் கரிசுகூட இல்லை. இங்கிலயில் பல நாட்கள் குழந்தையும் நானும் பட்டினியால் வாடி னுேம். யாரிடமாயினுஞ் சென்று யாசித்தாலன்றி வயிறு பிழைக்க முடியாது. பிச்சை யெடுத்துண்டு உயிர் வாழ நான் விரும்பவில்லை. இனி எங்கு சென்ருலும் யாரை யடுத் தாலும் என் அழகினல் எனக்குக் கட்டாயம் ஆபத்துதான் சேருமென அறிந்தேன். எனவே ஒருவர் உதவியையும் காடாது கால் நடுங்கும்வரை நடப்பதும், சோர்வு நீங்கும் வரை வெறு வெளியில் படுப்பதுமா யிருந்தேன். வற்றிய முலையைப் பற்றியிழுத்து வாயில் பால் வராததைக் கண்டு குழந்தை என் முகத்தை நோக்கி யழ நான் அதன் வாடிய முகத்தைப் பார்த்துக் கண்ணிர்விட்டுக் கதறி யழுவதுமா யிருந்தேன். -

இங்ங்னம் பட்டினியோடு பலநாள் நடந்து நகரை விட்டு வெகுதாரம் வந்துவிட்டேன். பல கிராமங்களைக் கடந்து திருச்சியை யடைந்தேன். அந்தோ அங்கு தான் என் அருமைக் குழந்தை பகிக்கொடுமைக் கிரையாகியது. அகதியான எனக்கு ஆதரவா யிருக்குமென எண்ணிய என் கண்மணி குமுதவல்லி ஒன்றரை வயதுகூட முற்றுப்பெருத: நிலையில் வயிற்றுக் கொன்றுமின்றி இறந்தது எனக்குச் சகிக்கக்கூடாத துன்பத்தைக் கந்தது. குழந்தையின் பிரே தத்தைப் புதைக்கக்கூட வழி தெரியவில்லை. என் மனங் குழம்பியது. இக்குழந்தையின் உடலே ஓரிடத்தில் கிடத்தி விட்டு வெறிபிடித்தவள்போல் ஒடினேன். எனக்கு உண் மையிலேயே சித்தப்பிரமை யுண்டாய்விட்டது. அன்றிருந்து பசியாவது தாக்கமாவது இல்லை. ஒடியும் ஆடியும் கண்ட இடத்தில் சுற்றி யலந்து கிரிந்து கடைசியாக இப் பொதிய