பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

மலையை யடைந்தேன். இங்கு வந்து சில நாட்களான பிறகே என் அறிவு நிலை தெளிந்தது. கொடிய மிருகங்களும் விஷ ஜந்துக்களும் நிறைந்த, மலைப்பிரதேசமாயினும், இவ்விடம் எனக்கு நல்ல வாசஸ்தலமா யமைந்துவிட்டது. மிருகங்களும் பாம்பு முதலியவைகளும் கொடிய தன்மை வாய்ந்தனவென்று கூறுவது அடாது. பகுத்தறிவுள்ள மனிதர்களைக் காட்டிலும், இவை கொடியன வல்லவென மறுபடியும் வற்புறுத்திக் கூறுவேன். மனிதர்களிட மிருப்பதுபோல், இவைகள்பால், கபடம், சூழ்ச்சி, பொறாமை, துரோகம் முதலிய கொடுங் குணங்கள் சிறிதும் இல்லை. நம்மால் துன்பமில்லை யெனத் தெரிந்தால் கொடிய புலி பாம்புகூட நம்மை யொன்றுஞ் செய்வதில்லை நாம் அவைகளிடங் கருணையாக நடந்துகொண்டால். அவை நம்மிடம் நன்றியறிதலா யிருக்கின்றன. இச் “சுகநிலையத்”துக்கு. வந்த பின்னர், என்னைப் பிடித்திருந்த துன்பங்களெல்லாம் அறவே அகன்று விட்டன. எனக்கு இப்போது ஒருவித கவலையில்லை. பசியெடுத்தபோது பழம் முதலியவைகளைப் பறித்துண்கிறேன். தாகமெடுத்தால் தண்ணீர் அருந்துகிறேன். மற்ற சமயங்களில் சுகமாய் இம்மலைப் பிரதேசத்தைச் சுற்றி வந்து சுகமாகக் காலங்கழித்து வருகிறேன். இதுதான் எனது வாழ்க்கை வரலாறு” எனக் கூறி முடித்தாள் புவன சுந்தரி.

நரன் விநோதமும் துன்பமும் நிறைந்ததான அவளது வாழ்க்கை வரலாற்றைக் கேட்டு ஆச்சரியத்தர்ல் வாய் பிளந்து நின்றேன்.


முற்றிற்று.