பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓம்

முன்னுரை


மிழ் மொழியில் கதை யென்று சொன்னவுடனேயே, “இது என்ன மொழி பெயர்ப்பா? எந்த ஆங்கில நாவலைத் தழுவியது! அந்த நவீனத்தின் ஆசிரியர் யார்?” என நம்மவரில் பெரும்பாலார் கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். தமிழில் ஒரு கதை வெளி வந்ததென்றால், அது ஆங்கில மொழியிலோ, பிற மொழிகளிலோ உள்ள ஏதாவது ஒரு நாவலின் மொழிபெயர்ப் பாகத்தான் அல்லது ஒரு நவீனத்தைத் தழுவி எழுகப்பட்டதாகத்தான் இருக்குமென்று தீர்மானித்து விடுகின்றனர். இவர்கள் இவ்விதத் தப்பபிப்பிராயங் கொண்டிருப்பதற்குக் காரணமு மில்லாமலில்லை.

இப்போது நம் நாட்டில் உலவும் தமிழ்க் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது நவீனங்கள் ஆங்கில நாவல்களின் மொழி பெயர்ப்பு நூல்களாகவே இருக்கின்றன. தமிழ்க் கதாசிரியர்களில் பெரும்பாலோர், ஜியார்ஜ் ரெயினால்ட்ஸ், மேரி கோர்லி, எட்கார் வாலெஸ்ஸ்ர் வால்டர் ஸ்காட் போன்ற ஆங்கில ஆசிரியர்களால் எழுதப்பட்ட நாவல்களை மொழி பெயர்த்தோ அல்லது தழுவியோ கதை யெழுதுவதை ஆரம்பத்திலிருந்தே வழக்கமாகக்