பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றன்னையின் சதிச்செயல் 71

கான் வெளியே நோக்கியதும் பின்னடைந்தேன். பயத் தால் உடம்பு முழுதும் வியர்வை குயீரென்று அரும்பி வழிந்தன. என்னை யறியாது நான் நடுங்கினேன் ஆ! அங் நடு இரவில் நான் கண்ட காட்சியை என்னென்பேன்!

என்ன பயங்கரம்!

குடிசைக்கு எதிரே சிறிது தாரத்தில், ஒரு சிறுத்தைப் புலியும், கழுதைக் குறத்தியும் மிக உக்கிரமாகச் சண்டை செய்துகொண்டிருந்தன. மிருகங்களிடையே சண்டையேற் பட்டால் காடு தூள் பறப்பதைச் சொல்லவும் வேண் டுமோ எக்காரணத்தால் அவைகளிடையே சண்டை யுண் டாயிற்று என்பது நமக்கென்ன தெரியும்? வான விதியில் வெள்ளிய சந்திரிகைகளைக் கக்கிக்கொண்டு பிரகாசிக்கும் சந்திரன் அந்நேரத்தில் உலகையே வெண்மை மயமாக ஆக்கிக்கொண்டிருந்தா தைலால், காடாங்ககாரமான அம் மலைப் பிரதேசத்தில் கள்ளிரவு என்பதற்குரிய இருட்டு அடையாளம் சிறிதுமே இல்லாமல், பகல்போலக் காணப் பட்டது. ஆகையால், அம்மிருகங்கள் போடுஞ் சண்டை நன்முகத் தெரிந்தது. கழுதைக் குறத்தி உர்' என்று பயங்கர மாக உறுமிக்கொண்டு முன் கைகளால் ஒங்கி அடிக்கும் அவ்வடி தன்மீது விழாதவாறு தடுத்துக்கெண்டு பின் பக்க மாகப் போய்ப் பதுங்கிச் சமயம் பார்த்து அக்கழுதைக் குறத்திமீது சிறுத்தைப்புலி பாய்ந்து தாக்கும். இவ்வாறு இவை ஒன்றையொன்று மோதித் தாக்கிப் பெரும்போர் செய்துகொண்டிருந்தன. இம்மலையில் எங்கோ ஓரிடத்தில் இம்மிருகங்களிடையே கலகம் நேரிட்டு ஒன்றை யொன்று அடித்துத் துரத்திக்கொண்டு வந்து நாங்கள் இருக்கும்.இக் குடிசைக் கெதிரில் சில நிமிஷங்களாகச் சண்டை, கொண்டிருந்ததாகத் த்ெரிந்தது. நான் இதற்கு முன்

-

து: