பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௳

“இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்”



முதலாவது அதிகாரம்


பெண்ணா! பேயா !! தெய்வ மகளா !!!

“அம்மம்மா இப்பாழும் உலகை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகிறது; என் வயிறு பகீரெனப் பற்றி யெரிகிறது. ஆ என்ன அநியாயமான உலகம்? இதில் நடக்கும் கொடுமைகளை எம்மொழியால் அளவிட்டு எடுத்துரைப்பது! எங்கு பார்த்தாலும், வஞ்சகம், பேராசை, பொறாமை, காமம், கோபம், உலோபம், மதம், மாற்சரியம் முதலியவைகளே நிறைந்திருக்கின்றன. இக்கொடுங் குணங்களின் பரிணாமங்களாகவே மக்கள் பெரும்பாலும் இருக்கின்றனர். இத்தகைய கொடியோர் பெரும்பான்மையாக வாழும் இவ்வுலகத்தை, துன்பவுலகமாகிய நரகத்திலும் போக பூமியாகிய சுவர்க்கத்தினும் சிறந்ததென்று கவிஞர் வருணிக்கின்றனர். ஐயோ! இவர்களது பேதமையையும், பிச்சுக்கொள்ளித் தன்மையையும் என்னென்பது!—அவ்வளவு தூரம் போவானேன்! நானே ஒரு காலத்தில் அவ்வாறுதானே நம்பினேன்? பேரின்பத்தைத் தருவதாகக் கூறப்படும் மோட்சலோகமுங்கூட இவ்வுலகத்துக்கு இணையாகா தென்றன்றோ எண்ணியிருந்தேன்? அதிலும் இவ்வுலகத்தில் என்னைவிட அதிர்ஷ்டசாலி ஒருவரும் இருக்க முடியாதென்றன்றோ இறுமாப்புக் கொண்டிருந்தேன்? அவ்வெண்ண மெல்லாம் வெறும் பகற் கனவென்று இப்போதன்றோ தெரிகிறது!-நான் யாருக்காக உயிர்