பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றன்னையின் சதிச்செயல் 73

படுவதைவிட்டு) அஞ்சி நடுங்குவதென்ருல்-அது பரிகசிக் கத் தக்கதல்லவா! அதற்கு எனது பலவீனத்தை (உடல் பல வீன மட்டு மன்று; உள்ளம் பலவினமுங்கூட) கினைத்து வருந்தித் தலை குனிவதன்றி வேறு நான் என்ன செய்யமுடியும்! எனவே, இரண்டாம் முறையாக புவன சுந்தரியின் பெண்மை வீரத்தின்முன் என் ஆண்மையை இழந்து ஒடுங்கி கின்றேன். மேலே என்ன நிகழப்போ கிறதோ? என்ற வியப்பும் அச்சமும் ஒருங்கே தோன்ற, புவன சுந்தரியையும், சண்டையிடும் மிருகங்களையும் மாறி மாறிப்பார்த்துக்கொண்டு (அப்போதும் அச்சத்தோடேயே) நின்றுகொண்டிருந்தேன்.

அம்மிருகங்களில் ஏதேனு மொன்று அவள் பக்கமாக பின்னுக்கு வாங்கிப் பதுங்கி வரும்போது கொஞ்சம் ஒதுங் கிச் சந்தர்ப்பத்திற் கேற்றவாறு அடிக்கடி இடம் பெயர்ந்து நின்று சண்டையைக் கவனித்துக்கொண்டிருந்தவள், திடீ ரென ஏதோ கினைத்துக்கொண்டவள் போலத் திரும்பி என்னைப் பார்த்தாள். அவ்வாறு பார்த்த வளவிலேயே எனது அச்சத்தையும், மனநிலையையும் ஒருவாறு உணர்ந்து கொண்டாள் என்றே நினைக்கிறேன். அடுத்த கணத்தில் அவள், தான் உடுத்தியிருந்த சேலையை வரிந்து இழுத்துக் கட்டிக்கொண்டு யாருடனே யுத்தஞ் செய்வதற்குத் தயாரா யிருப்பவள்போல் கின்ருள். இப்போது அவளது கம்பீரத் தோற்றத்தை சான் எவ்வாறு விவரித்துரைப்பேன்! குஸ்தி, குத்துச்சண்டை போடும் உஸ்தாக் ஒருவன் மைதானத்தில் எதிரி முன் வந்து நிற்கும்போது, அவனது தோள்களும், மார்பும் எவ்வாறு உருண்டு திரண்டு கரளே காளையாக இருக்குமோ அதேபோன்று அவளது தோள்களும் ஆரித்துத் தோன்றின. இச் சமயத்தில் கழுதைக்குறத்தி

6 • ' '{*;