பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101


இவர்களது துரோகச் செயலுக்குண்டான தண்டனையை நாயகத் திருமேனி தானே வழங்காது, யூதச் சமயத் தலைவரிடம் ஒப்படைத்து, யூத வேதாகமப்படி தண்டனை வழங்குமாறு கூறினார். அந்தந்த சமய வேதாகமப்படி அவரவர் சமயத்தவர்கட்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது அண்ணலார் நெறி முறையும் மதீனா நகர்ச் சட்ட நியதியுமாகும்.

பெருமானார் பணித்ததற்கொப்ப மதீனத்தவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்த விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட தேசத் துரோகக் குற்றமிழைத்த 300 பேர் களுக்கும் யூத சமய வேதாகமப்படி, யூத சமயத் தலைவர்கள் மரண தண்டனை விதிக்க, அது அவர்களாலேயே நிறைவேற்றப்பட்டது.

சமயச் சகிப்புத் தன்மையைத் தன் உயிரோட்டமாகக் கொண்ட மதீனா சட்டங்கள் பல்வேறு சமயப் பிரிவினருக்குமான பொதுச் சட்டங்கள் என்ற சிறப்பைப் பெற்றன. இதில் ஒவ்வொரு இனத்துக்கும், தாங்கள் சார்ந்த சமயத்துக்கும் பூரண சுதந்திரம் இருந்தது. எந்தக் கட்டுப்பாட்டையும் எந்த முஸ்லிமல்லாதவர் மீதும் சிறிதும் திணிக்கவில்லை; ஆதிக்க உணர்வையும் காட்டவில்லை. இதையே திருக்குர் ஆன்:

“இன்ஜில் வேதத்தையுடையவர்கள், அதில் அல்லாஹ் அறிவித்திருக்கும் (கட்டளைகளின்) பிரகாரமே தீர்ப்பளிக்கவும்” (5:47) எனத் தெளிவாகக் கூறுகிறது.

இதைப் போன்றே யூதர்களும் பிற சமயத்தவர்களும் தங்கள் வேதமுறைப்படி தீர்ப்பு வழங்க முழு உரிமை பெற்றனர்.

இவ்வாறு, மதீனத் தலைவராக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இருந்தபோதிலும் அவரவர் சமய வேத நெறிப்படி