பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

முறைகளைப் பேணவும் சமயங்கள் கூறும் நியதிப்படி வாழவும் முழு உரிமை உண்டு.

முழுமையான மதச் சுதந்திரம்

மதீனாவில் பெருமானாரால் உருவாக்கப்பட்ட எழுத்துப் பூர்வமான அரசமைப்புச் சட்டம் பல வகைகளில் இன்றைய உலகுக்கு ஒர் உன்னத முன்னோடிச் சட்டமாக விளங்குகிறதெனலாம்.

முதலாவது முழுமையான மதச் சுதந்திரத்துக்கு முழுமையான உத்திரவாதமளித்தது. அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவியுமாறு மையப்படுத்தப்படாமல் சமுதாயம் முழுமைக்குமாக பரவலாக அமையுமாறு பார்த்துக் கொண்டார் பெருமானார் (சல்) அவர்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள் மீது எக்காரணம் கொண்டும் இச்சட்டங்கள் தனி ஆதிக்கம் அல்லது அதிகாரம் செலுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆகும்.

இறுதி வேதமாக இஸ்லாமியத் திருமறையாம் திருக்குர்ஆன் அமைந்திருந்த போதிலும் அஃது கடுகளவும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் திணிக்கப்படவோ அன்றி ஆதிக்கம் செலுத்தவோ அனுமதிக்கப்படவில்லை. அவரவர் சமயச் சூழலுக்குள், தங்கள் வேதவாக்கின்படி கொள்கை கோட்பாடுகளுக்கிணங்க இயங்க முழுமையாக அனுமதிக்கப்பட்டார்கள். கிருஸ்தவர்களோ அல்லது யூதர்களோ அல்லது வேறு சிலை வணக்கச் சமயத்தவர்களோ சமயக் குழுமமாக ஒன்றிணைந்து வாழ அனுமதிக்கப்பட்டனர். தங்களுக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவுகள், கொள்கை கோட்பாட்டு வேறுபாட்டுப் பிரச்சினைகள் எதுவாயினும் அந்தந்தச் சமயத்தைச் சேர்ந்த நீதிபதிகளைக் கொண்ட வழக்கு மன்றங்கள் மூலம் தங்கள் வேத