பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

கண்ணோட்டம்’ எனும் நூலை எழுதி வெளியிட்டேன். தமிழ் கூறு நல்லுலகம் அதை ஏற்றுப் பேராதரவு தந்தது. இப்போது ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ எனும் இந்நூலையும் அவ்வாறே எழுதி வழங்க ஆவல் கொண்டேன்.

இந்நூலுக்குத் தகுதி மிக்க பெரியார் ஒருவரிடம் அணிந்துரை பெற எண்ணியமாத்திரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பெரியவர் திரு சி.சுப்பிரமணியம் அவர்கள் நினைவே என் மனக்கண்முன் நிழலாடியது. அரசியலிலும் சமுதாயப் பணியிலும் பட்டறிவின் நிறைகுடமாக விளங்கும் அவர்கள் என்மீதும் என் தமிழ்ப் பணிமீதும் பேரன்பு கொண்டவர்கள். அவர்களை அவ்வப்போது சந்தித்து அளவளாவும் பழக்கமுடைய நான் அவர்களோடு உரையாடி மகிழும்போதெல்லாம் புதிய புதிய உணர்வுகள் என்னை ஆட்கொள்ளும். அவர்களிடம் என்விழைவைக் கூறியபோது, அவர் தன் உடல் நலிவான நிலையிலும் பேரார்வப் பெருக்கோடு ஒப்புக்கொண்டு ஒரு சில நாட்களுக்குள் நூலைப் படித்து அழகியதோர் அணிந்துரையை எழுதித் தந்து பெருமைப்படுத்தினார்கள். இந்நூல் வெளிவந்ததில் அவர்கட்குப் பெரும் மகிழ்ச்சி. அன்னாருக்கு நான் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

அவ்வாறே என்மீது அன்பும் மதிப்பும் கொண்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியும் ஆக்கச் சிந்தனையாளருமாகிய மாண்பமை சி.மு.அப்துல் வகாப், எம்.ஏ; பி.எல் அவர்களிடம் இந்நூலுக்கு முகவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். என் விருப்பத்தை உடனே ஏற்றுக் கொண்ட அவர்கள் தனது அலுவல்களுக்கிடையே இந்நூலை முழுமையாகப் படித்து, ஆய்வு அடிப்படையில் முகவுரை தந்து சிறப்பித்துள்ளார்கள். இன்றையச் சமுதாயச் சூழலில் இத்தகைய நூல்கள், பெருமளவில் வெளிப்படுவதன் மூலம்