பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

வந்தபோது அந்நாட்டின் குடிமக்களான கிருஸ்தவர்கள் படையெடுப்பாளர்களை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்ற தாக டச்சு வரலாற்றுப் பேராசிரியர் தெ கொயெஜி குறிப்பிடுகிறார்.

கிருஸ்தவ ஆட்சியில் இல்லா
மதச் சுதந்திரம் இஸ்லாமிய ஆட்சியில்

நான்காவது கலீஃபாவான அலி (ரலி) அவர்களின் ஆட்சியின்போது பைஸாந்தியப் பகுதி முழுமையும் வெற்றி கொள்ளப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த முஸ்லிம்களிடையே உள்நாட்டுப் போர்ச் சூழல் உருவாகியது. இந்த அரிய வாய்பைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு இழந்த பகுதியை மீண்டும் பெற்றுவிட விரும்பிய கிருஸ்தவப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ட் இஸ்லாமியப் பகுதியிலிருந்த கிருஸ்தவர்களுக்கு ஒரு இரகசியச் செய்தியை அனுப்பினார். அதில் “இப்போது ஒரு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. உங்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுங்கள். அதே சமயத்தில் நானும் என்னுடைய படையை உங்களுக்குத் துணையாக அனுப்பி வைப்பேன். நாம் நம்முடைய பொது எதிரியாகிய முஸ்லிம்களை விரட்டியடித்து நாட்டைவிட்டே வெளியேற்றி விடலாம்” எனப் பேரரசர் கூறியிருந்தார். இக் கடிதத்தை பெற்ற பைஸாந்திய கிருஸ்தவர்கள் “உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் (முஸ்லிம்கள்) நம் சமய விரோதிகளாகப் படலாம் ஆனால், முஸ்லிம்களின் ஆட்சியின்கீழ் வாழும் கிருஸ்தவர்களாகிய நாங்கள் ஒரு கிருஸ்தவ ஆட்சியின்கீழ் பெற முடியாத முழுமையான மதச் சுதந்திரத்தோடு வாழ்கிறோம். முஸ்லிம்களுக்கிடையே மோதல் இருந்தபோதிலும், அதனால், கிருஸ்தவர்களின் மதச் சுதந்திரம், மகிழ்ச்சியான வாழ்வு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. எனவே,