பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

ஆட்சியாகவே நடந்து வந்தது. ஆகவே ஆளும் பேரரசர் கிருஸ்தவ சமயத்தின் எப்பிரிவைச் சார்ந்துள்ளாரோ அதைத் தவிர அதே கிருஸ்தவ மதத்தின் பிற பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு எதிரான முறையிலேயே செயல்பட்டு வந்தனர். தங்கட்கு மாறுபட்ட, மாற்றுப் பிரிவைச் சார்ந்த கிருஸ்தவர்களை அழித்தொழிக்கவும் தயங்கவில்லை என்றால் மாற்றுச் சமயத்தவர்களின் நிலை எத்தகையது என்பதைப் பற்றிக் கூற வேண்டியதில்லை.

இதற்கு அன்றையச் சூழ்நிலையில் கிருஸ்தவ ஆட்சியாளர்களிடையே மாறி மாறி ஏற்பட்டு வந்த கிருஸ்தவ சிலை வணக்கப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கான பின்னணியை வரலாற்று அடிப்படையில் அறிவது அவசியம்.

உருவ வழிபாடு கற்பித்த கிரேக்கர்

உலகிலேயே உருவ வழிபாட்டிற்கு ஊற்றுக்கண்களாக விளங்கியவர்கள் கிரேக்கர்கள் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் நாட்டின் மாமேதைகளுக்கும் வீரர்களுக்கும் தியாகிகளுக்கும் உருவம் அமைத்து அவர்களின் நினைவை என்றென்றும் போற்றிக் காக்க முனைந்தார்கள். நாளடைவில் இவ்வறிஞர், வீரர் சிலைகளை வணக்கத்திற்குரியவைகளாக மாற்றி வணங்கத் தொடங்கினர். இம்முறையை அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் பரப்பினர் எனக் கூறப்படுகிறது.

கிரேக்கர் என்றைக்கு இந்தியாவின் சிந்துச் சமவெளி யில் கால் பதித்தார்களோ அப்போதே அப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்த ஆரியர்கட்கு உருவ வழிபாட்டு முறையைக் கற்றுக் கொடுக்கலாயினர். பின்னர் ஆரியர்கள் எங்கெல்லாம் பரவினார்களோ அங்கெல்லாம் உருவ