பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வம்சத்தைச் சேர்ந்த ஐரீனி எனும் அரசி அரசு அதிகாரத்தை ஏற்றவுடன் கிருஸ்தவக் கோயில்களில் மீண்டும் சிலை வணக்க முறையைக் கொண்டு வந்தார். கி.பி.833இல் கான்ஸ்டாண்டிநோபிளின் டியூவேல்ஸ் மன்னர் சர்ச்சுகளில் சிலை வடிவிலோ படவடிவிலோ வணக்கமுறை அறவே இருக்கக் கூடாதென கடுமையாகக் கட்டளை பிறப்பித்தார். இவருக்குப்பின் விக்கிரக வணக்க நம்பிக்கையாளரான இவர் மனைவி கி.பி 841 பிப்ரவரி 18 ஆம் நாள் சிலை வணக்க முறையை எதிர்ப்போர் மத விரோதிகளாவர் என அறிவித்து சிலை வணக்கமுறையை மீண்டும் கொண்டு வந்தார். சிலை வணக்கமுறையை எதிர்த்த, ஆதரித்த அரசர்களும் அரசிகளும் ஒவ்வொரு முறையும் கிருஸ்தவ பாதிரியார்களின் சபையைக் கூட்டியே முடிவெடுத்துச் செயல்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இவ்வாறு மாறி மாறி ஏற்பட்டு வந்த சிலை வணக்கம் பிரச்சினை மக்களின் வாழ்வை வெகுவாக அலைக் கழித்ததை வரலாறு பதிவு செய்துள்ளது.

சிலை வணக்க மாதா கோயில் இடிப்பு

பைஸாந்தியப் பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்று வதற்கு முன்னதாக அப்பகுதியை பேரரசர் லியோ இஸாரியன் என்பவர் ஆண்டு வந்தார். இவர் கிருஸ்தவ சமயத்தைச் சார்ந்தவராயினும் அதில் சிலை வணக்க முறையை ஏற்காத கிருஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர். மாதா கோயில்களில் சிலை வணக்கம் செய்யும் கிருஸ்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தும் வந்தார். தன் கட்டளைக்கு இணங்காது, ஏதாவது மாதா கோயிலில் சிலை வணக்கம் நடைபெற்றால் அம்மாதா கோயிலையே இடித்து விடுவார். இதற்காக நாடெங்கும் தன் படையை அனுப்பி கிருஸ்தவர் களின் வழிபாட்டு முறையைக் கடுமையாகக் கண்காணித்து