இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
இஸ்லாத்தின் உண்மை நிலையும் சமுதாய மேம்பாடும் வலுப்படும் என்ற அவர்தம் சிந்தனை வரவேற்கப்படத்தக்க ஒன்று என்பதில் ஐயமில்லை, அவர்கட்கும் என் இதய நன்றிகளைப் புலப்படுத்திக் கொள்ள விழைகிறேன்.
இந்நூலை அழகிய முறையில் வெளிவர துண்டுகோலா கவும்துணையாகவுமிருந்த என் துணைவியார் திருமதி சித்தை சௌதா அவர்கட்கும் முகப்போவியம் வரைந்த திரு கலைமதி அவர்கட்கும் என் நன்றி.
முதற் பதிப்பை ஏற்று ஆதரவளித்த தமிழுலகம் இம்மறு பதிப்பையும் ஏற்றுப் பேராதரவு நல்கும் என நம்புகிறேன்.
சென்னை - 40 மணவை முஸ்தபா
நூலாசிரியர்