பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119


மாதா கோயில் சிலை காத்த முஸ்லிம்கள்

இஸ்லாமிய நெறிப்படி இறைவனுக்கு இணை வைப்பதை அறவே ஏற்காததோடு, அதைப் பெரிதும் வெறுப்பவர்கள் முஸ்லிம்கள். சிலை வணக்கத்தைக் கடுகளவும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டார்கள். ஆயினும் பிற சமயத்தவர் நம்பிக்கையை மதிப்பவர்கள். அதற்கு ஊறுபாடாக ஒருபோதும் இருக்கக் கூடாது என்பதே திருமறையாம் திருக்குர்ஆன் உணர்த்தும் உணர்வாகும்.

‘அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகின்றார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்.’ (6:108) எனப் பணிக்கிறது இஸ்லாம்.

இதன் மூலம் பிறசமயத்தவர்களின் வணக்கத் தலங்கள், அவர்கள் போற்றும் வேதங்கள், அவர்கள் மேற் கொண்டொழுகும் சமயச் சடங்குகள் ஆகிய அனைத்தையும் மதிக்க வேண்டும் என இஸ்லாம் உணர்த்துகிறது.

இதற்கேற்ற எத்தனையோ எடுத்துக் காட்டுகள் அண்ணலார் வாழ்க்கையிலும் அவர்தம் வாழ்வையும் வாக்கையும் வழுவாது பின்பற்றிய கலீஃபாக்களின் வரலாற்று நெடுகிலும் காண முடிகிறது.

பைஸாந்தியப் பேரரசன் லியோ இஸுரியனைவிட தீவிரமாக சிலை வணக்க முறையை ஏற்காதவர்கள் மட்டுமல்ல. கடுமையாக எதிர்ப்பவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் நினைத்திருந்தால், இஸ்லாம் மார்க்கம் அனுமதித்திருந்தால் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சிலை வணக்கத்தலமான அம்மடாலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கியிருக்கலாம். ஆனால் இத்தகு செயலை, வழிமுறையை இஸ்லாம் ஏற்காத காரணத்தால் முஸ்லிம்கள் அந்த இழி செயலில்