பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

மொழிபெயர்ப்புக்கென்றே உருவாக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவ்வாறு பல நூறு ஆண்டுகட்கு முன்பே முதன் முதலாக இந்தியத் தத்துவங்களை, ஹிந்து சமயம், கலை, கலாச்சாரத்தை, பாரதப் பண்பாட்டு மேன்மைகளை மேலை உலகு தெளிவாக அறிந்து கொள்ள கதவு திறந்துவிட்ட பெருமை இஸ்லாமியரான அல்புரூனி அவர்களையே சாரும் என வரலாற்றறிஞர்கள் இன்றும் புகழ்ந்து எழுதி வருகிறார்கள்.

இந்தியா வந்த பல்வேறு இனத்தவர்

இந்தியாவிற்கு உலகெங்கணுமிருந்து பல்வேறு இனத்தவர்கள் அடுத்தடுத்து வந்து இந்தியப் பண்பாட்டில் தங்கள் செல்வாக்கையும் தாக்கத்தையும் ஏற்படுத்தினர்.

வேற்று இனப் படையெடுப்பாளர்களாக முதலில் வந்தவர்கள் ஆசிய இனத்தவர் (கி.மு.2500). தொடர்ந்து பாரசீகர்கள், கிரேக்கர்கள், பார்திகன்ஸ், இஸ்கெதியன்ஸ், ஹுணர்கள், அராபியர்கள், பட்டாணியர்கள், முகலாயர்கள், அஹோம்ஸ், போர்த்துக்கீசியர், ஆங்கிலேயர்கள் ஆகிய பல்வேறு இனத்தவர்களின் வருகையின் மூலம் அவர்தம் சமய, வாழ்வியல், கலை, இலக்கிய, பண்பாட்டு முறைகள் இந்திய வாழ்வியல் துறைகள் அனைத்திலும் அழுத்தமாகப் படிந்தன.

கலை, இலக்கிய வளர்ச்சியில் திருப்புமுனை

ஆட்சி மொழியாக இருந்த பார்சி, அரபி இவைகளோடு, சமஸ்கிருதமும் கலந்த கலப்பு மொழியாக உருது அமைந்தது. பார்சி, அரபி மொழிகளுக்கு மிகுந்த ஆதரவு அரசால் அளிக்கப்பட்டது. இவ்விரு மொழிகளிலும் சமஸ்கிருத நூல்கள் பலவும், உபநிஷத், பகவத் கீதை