பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

இறைவனால் ஒருவகை வஹீ மூலம் வழங்கப்பட்டவைகளேயன்றி அவை மனிதர்கள் யாராலும் இயற்றப்பட்டவை கள் அல்ல என்பதைத் தெளிவாக்குகிறார்.

இவ்வாறு முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) தோன்றிய இந்தியப் பகுதியில் பல்வேறு வேதங்கள் பல்வேறு இறைத் தூதர்கள் மூலம் ஏக இறைவனால் வழங்கப்பட்டுள்ளன என்பதை காஞ்சிப் பெரியவர் போன்றவர்களின் ஆய்வுக் கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வகையில் இறை தூதரான நபிகள் நாயகம் (சல்) மூலம் இறுதி வேதமாக அமைந்திருப்பதே இறைமறையாகிய திருக்குர்ஆன்

இஸ்லாமியர் உறவால் பிறந்த
ஆதி சங்கரரின் ‘அத்வைத’க் கொள்கை

ஹிந்து சமயத்தின் மாபெரும் எழுச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் காரணமாயமைந்தவர் ஆதி சங்கரர் ஆவார். தனியொரு மனிதராக தென்முனை கேரளத்தின் காலடியிலிருந்து வட இமயம்வரை சென்று ஹிந்து சமயத்தை புனர் நிர்மாணம் செய்தவர்; அதற்கு மாபெரும் உந்து விசையாக அமைந்தது அவரது ‘அத்வைத’க் கொள்கை.

ஆதி சங்கரரின் மூலத் தத்துவம் ‘அத்வைதம்’ ஆகும். அத்வைதம் என்பது வேதாந்த மதங்களுள் ஒன்றாகும். பிரம்மம் இரண்டற்ற மூலப்பொருளாகும். ‘அத்வைதம்’ என்ற சொல்லுக்கு இரண்டற்றது என்பது பொருளாகும்.

ஆதி சங்கரர் இக்கொள்கையை இஸ்லாத்திலிருந்து தான் பெற்றார் என்பதை தத்துவ அறிஞர்கள் பலரும் ஒரு முகமாகக் கூறி வருகின்றனர். இதைப் பற்றி இஸ்லாமிய கலைக் களஞ்சியம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது: “எட்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் மலையாளத்