பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146


“இவற்றின் காரணமாகத்தான் லிங்காயதம் பிரிவு இந்தப் பிராந்தியங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் செல்வாக்கினால் தோன்றியது என்ற முடிவு மறுக்க முடியாததாக ஆகிறது. அதனுடைய புரட்சிகரமான கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் வேறு எந்த அடிப்படையிலும் விளக்க முடியாமலிருக்கிறது. ஹிந்துக்களிடம் ஊறிப்போன புனர் ஜென்ம நம்பிக்கை, பிணத்தை எரித்தல், சாவின்போது தீட்டை ஒழிக்கச் செய்யும் சடங்குகள், ஜாதி, ஆண்-பெண் அடிப்படையில் உண்டான ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஒழித்தல், விவாக சீர்திருத்தம், புனிதமான குருவின் தலைமையில் பணியாற்றும் வீர சிஷ்யர்களுடைய கூட்டம், “அல்லமா பிரபு” என்ற பெயரில் (அல்லாஹ் என்பதன் சாயலில்) கடவுளைக் குறிப்பிடுதல் ஆகிய அனைத்தும் எந்த மறுப்புக்கும் இடமின்றி இஸ்லாத்திலிருந்தே பிறந்தன என்பதை உணர்த்தும்” என்று டாக்டர் தாரா சந்த் கூறுகிறார். (பக். 119-120)

ஶ்ரீ ராமானுஜர் சமத்துவப் போதனையும்
இஸ்லாமியச் செல்வாக்கும்

இஸ்லாமிய நெறி இங்கு வாழும் மக்களை மிக எளிதில் ஈர்த்ததற்கான காரணங்களைப் பற்றி ஆராய்ந்து கூறுகிறார் ஆய்வறிஞர் புகழ்மிகு நீதிபதி எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள். “பிறப்பின் அடிப்படையில் வர்ண பேதம், ஜாதி வேற்றுமை கற்பிப்பதும் அதன் காரணமாக ஏற்றத்தாழ்வு கற்பிப்பதையும் போல தனிமனிதனுடைய தன்மான உணர்ச்சியைப் புண்படுத்துவது வேறு எதுவும் இருக்க முடியாது.

“எங்கு பிறந்தவனாயினும், எந்நிறத்தவனாயினும், எவ்வினத்தவனாயினும், எத்தரத்தவனாயினும், ஆணாயினும் பெண்ணாயினும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய