பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

வுடன் பரிபூரண சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பெற்று விடுகிறார்கள் என்பது இஸ்லாத்தினுடைய சக்தி வாய்ந்த தாரக மந்திரமாகும். இது முஸ்லிம்களிடையே கொள்கையளவில் நின்றுவிடாமல் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில், தொழுகை போன்ற வழிபாட்டு முறைகளிலும் திருமணம் போன்ற சமுதாய நிகழ்ச்சிகளிலும் முழுமையாக இடம் பெற்றுள்ளது. ஆகவேதான், தனிமனிதனுடைய தன்மான உணர்ச்சிக்கு இது ஒரு பெரிய ஆகர்ஷண சக்தியாகும். இந் நாட்டில் வாழ்ந்திருந்த பெரும் பான்மையான மக்களை இஸ்லாம் கவர்ந்ததற்கு இதுவே பிரதான காரணமாக ஆயிற்று”.

(நீதிபதி எம்.எம் இஸ்மாயீல் “இஸ்லாமும் இந்திய சமயங்களும் பக். 7, 8)

இந்த அடிப்படையில் ஶ்ரீ ராமானுஜரின் சமத்துவ போதனையை அணுகும்போது ஆய்வாளர்களுக்குப் புதிய உணர்வுகளும் தகவல்களும் புலனாகின்றன. இஸ்லாத்தின் சமத்துவ உணர்வுச் சிந்தனை ஶ்ரீ ராமானுஜரின் சமத்துவப் போதனைகளுக்குத் தூண்டுகோலாயமைந்ததை அன்றையக் காலச் சூழலும் நிகழ்வுகளும் சான்றளிப்பவையாயுள்ளன.

ஶ்ரீராமானுஜர் காலத்தில் இஸ்லாமிய நெறி சோழ மண்டலத்தில் முனைப்போடு பரவி வந்தது. சோழ நாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்துவந்த முஸ்லிம்களின் வாழ்க்கை முறையும் சிந்தனைப் போக்கும் பிற சமய மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்ப்பனவாக அமைந்தன. அதற்குத் திருச்சியில் அடக்கமாகியுள்ள நத்ஹர் ஒலி போன்ற இஸ்லாமிய மார்க்க ஞான மேதைகள் இடையறாது மக்களிடையே இஸ்லாமிய நெறியை எளிமையாக விளக்கிப் பிரச்சாரம் செய்து வந்ததும் ஒரு காரணமாகும். இதனால் இஸ்லாமிய நெறியின்பால் பொது மக்கள்