பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

கிடக்கும் மக்கள் குலம் ஒன்றுபட, ஆன்மநேய ஒருமைப்பாடு பெறத் தூண்டுகிறார்.

இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப் பயணத்தின்போது அணியும் துறவுணர்வூட்டும் இஹ்ராம் வெள்ளுடையான தைக்கப்படாத ஒரு துண்டை இடுப்பிலும் மற்றொரு துண்டை மேலே போர்த்தியும் எப்போதும் காட்சி தரும் வள்ளலார் உருவ வழிபாட்டை விடுத்து ஜோதி வடிவாக இறைவனைக் கண்டு வணங்கிப் போற்றி வந்தார். இவரது இறையுணர்வையே திருமறையாகிய திருக்குர்ஆன்,

“அல்லாஹ் மண் விண் இவ்விரண்டில் ஒளியாய் இருக்கிறான்” (திருக்குர்ஆன் 24:35)

எனத் தெளிவுபடக் கூறுகிறது.

இத்தகு போக்குடைய ‘திருவருட்பா’வை சைவ சமயத்தைச் சார்ந்த சிலர் ஏற்காததோடு அதை மருட்பா எனக் கூறி விலக்க முற்பட்டபோது, இறையுணர்வு பூத்துக் குலுங்கும் சமரச சன்மார்க்க நெறி காட்டும் வள்ளலார் பாடல்கள் ‘மருட்பா’ அன்று, அருட்பாவே யாகும் என்பதை எதிர்ப்பாளர்களிடையே திறம்பட விளக்கி நிலை நாட்டிய சதாவதானி செய்குத்தம்பி பாவலர் சமய ஒற்றுமைக்கும் சமய சமரசத்துக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக வரலாற்றில் திகழ்கிறார்.

சொல் கடந்த ஞான உணர்வு

குணங்குடி மஸ்தான் போன்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் தங்கள் சமய சமரச உணர்வுகளை வெளிப் படுத்த இஸ்லாமியச் சொற்களான அரபுச் சொற்களை எந்த அளவுக்குப் பயன்படுத்தினார்களோ அதே அளவுக்கு இந்து சமயத் தத்துவச் சொற்களான நந்தீஸ்வரன், விட்டுணு, உருத்திரன், சிவன், அம்பலம், சக்தி, தட்சிணா மூர்த்தி