பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

வர்களின் மனம் புண்படலாம். எனவே இதை ஏற்புடைய செயலாக இஸ்லாம் ஏற்காமல் அதை அடியோடு தவிர்க்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறது.

அவ்வாறாயின், பிற சமயங்களைப்பற்றி, கொள்கை கோட்பாடுகளைப்பற்றிப் பேசவோ, விவாதிக்கவோ அறவே கூடாதா எனக் கேட்கலாம். பிற சமயங்களைப் பற்றி பேசுவதையோ விவாதிப்பதையோ இஸ்லாம் அறவே தடைசெய்யவில்லை. இத்தகைய கலந்துரையாடல்கள், விவாதங்கள் பிற சமயத்தவர்களின் மனம் எக்காரணம் கொண்டும் புண்பட்டு விடாதபடி மிகவும் கவனத்தோடும் உயர்ந்த பண்பாட்டோடும் நடைபெற வேண்டும் என்பதை இஸ்லாம் மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறது. இதையே திருமறை,

“வேதம் பெற்றுள்ள மக்களோடு பண்பட்ட அழகிய
முறையிலன்றி விவாதம் செய்யாதீர்கள்”

எனப் பணிக்கிறது. இக்கட்டளையானது வேதங்களையுடைய மதத்தவர்ட்கு மட்டுமின்றி பிற சமய நம்பிக்கையாளர்கட்கும் பொருந்தும்.

பிற சமயங்களை மதிக்கப் பணிப்பதோடு அவற்றிற்குப் பாதுகாப்புக் கேடயமாகவும் செயல்படத் தூண்டுகிறது இஸ்லாம்.

இஸ்லாத்தின் பிற சமயப் பரந்த நோக்கு

உலகிலுள்ள ஒவ்வொரு சமயமும் தத்தமது சமயத்தைப் பாதுகாப்பைப் பற்றியே பெரிதும் பேசுகின்றன; வலியுறுத்துகின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே இறைவணக்கத் தலமாகிய மஸ்ஜிதுகளைப் பாதுகாப்பது பற்றிப் பேசுவதைவிட பிறசமய வணக்கத் தலங்களாகிய யூத ஜெபாலயங்கள், கிருஸ்தவ மாதா கோயில்கள் போன்ற